செல்வாக்கு Shreveport, Louisiana, USA 63-1130B 1இக்காலையில் இங்கு கூடியிருக்கும் அருமையான ஜனங்களின் மத்தியில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சியுறுகிறேன். விசேஷமாக இந்த ஆராதனை, வாலிப பிள்ளைகளுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்து மகிழ்ச்சியுறுகிறேன். இந்த நாளைய தினத்தின் (நாளைய தினம் என்று ஒன்றிருக்குமானால்) வாலிப ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் பிரசங்கிக்கப் போவதை என்னுடைய வாழ்நாளின் ஒரு உன்னதமான நேரமாகக் கருதுகிறேன். ஆகவே நாங்கள் இதற்காக மகிழ்ச்சியாயிருக்கிறோம். 2இக்காலை நேரத்தில் இந்த சிறிய கூட்டமாகிய ஜனங்களில் எத்தனை ஸ்தாபனங்கள் பிரதிநிதிப்படுத்தப்பட்டுள்ளது? மெத்தோடிஸ்டுகள், உங்கள் கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். இக்கூட்டம் இன்னாருக்கென்று நியமிக்கப்படுதலின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்பதை சற்று முன்பு அவர் சொல்ல நான் கேட்டேன். அது சரி பாப்டிஸ்டுகள் உங்கள் கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். நல்லது. பிரஸ்பிடேரியன்கள்? லூத்தரன்கள்? பெந்தெகொஸ்தேயினர்? ஓ நசரேயன்கள்? பரிசுத்த யாத்திரீகர்கள்? நான் குறிப்பிடாத ஸ்தாபனங்களிலிருந்து யாராகிலும் இருந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்? ஆம், பாருங்கள். வைதீகமான யூதர்கள் இங்கு இருக்க நேரின் உங்கள் கரங்களை நாங்கள் பார்க்கட்டும்? சரி, ஐயா. முன்பு ஒரு சமயம் இங்கு நடந்த கூட்டத்தில் வைதீக யூத மதத்தைச் சேர்ந்த ரபிகளில் ஒருவர் இங்கு வந்திருந்தார், நம்முடையவைகள் யாவற்றிற்கும் இந்த வைதீக யூத மதமானததாயாயிருக்கிறது. வைதீக யூத மதமானது கிறிஸ்தவ சபையென்னும் பிள்ளையைக் கொண்டு வந்தது. யூத மதத்தினின்று கிறிஸ்தவம் பிறந்தது. இக்காலையில் நீங்கள் சேர்ந்துள்ள சபைகளையும், கொள்கைகளையும் பிரதிநிதிப்படுத்துவதற்காக நாங்கள் மகிழ்ச்சியுறுகிறோம். இன்றைய தினம் தேவன் வருவாரென்றால் நீங்கள் எந்த ஸ்தாபனங்களை சார்ந்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை அவர் கேட்க மாட்டார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நாம் யாவரும் இக்காலையில் அவரோடு போகிறோம் என்றால், நம்மில் ஆயத்தமாயிருக்கிறவர்களை மட்டுமே தம்மோடு கொண்டு செல்வார் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன். 3அநேக வருடங்களுக்கு முன்பு மாட்டு மந்தையை நான் மடக்குவது வழக்கம். இக்காலை இங்கு அமர்ந்திருக்கும் சகோ. வெல்ச் இவான்ஸ்; ஜெபர்சன்வில்லில் உள்ள எனது சபையின் சகோ. பாஸ்வுட் அவர்களுடனும் சில மாதங்களுக்கு முன்பு திரும்பவும் அந்த திறப்பின் வாசலில் நான் நின்றிருந்தேன். எந்த திறப்பின் வாசலைக் குறித்து உங்களிடம் அதிகம் பேசியிருந்தேனோ அதற்கு பின் வாசலின் ஊடே நாங்கள் கடந்துச் சொன்னோம். ஹெரி போர்ட் சங்கத்தைச் சார்ந்தவர்கள் மேய்ச்சலின் மாடுகளை அராப்பாவோ (Arapajo) காட்டிற்குள் துரத்திவிடும் போது அச்சமயங்களில் அநேக காலை நேரங்களில் நான் அங்கு இருந்து அதை பார்ப்பேன். இந்த (Hereford) ஹெரிபோர்ட் சங்கம் தங்கள் மாடுகளை காட்டின் இந்த பக்கமான இடுக்கமான ஆறு என்னும் இடத்தில் தங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள். இந்த இடம் கிழக்கு போர்க் என்று அழைக்கப்படுகிறது. அந்த பக்கத்திலுள்ள மேற்கு போர்க் இடுக்கமான ஆறு; மேல் இடுக்கமான ஆற்றின் பகுதியிலும் மந்தை மேய்ப்பார்கள்: 4எத்தனை மந்தையாயிருந்தாலும் அதற்கான காய்ந்த புல்லைக் குறித்த விவகாரத்தை சேம்பர் ஆப் காமர்ஸ் (இது ஒரு வணிக நிறுவனம் - தமிழாக்கியோன்) என்ற நிறுவனம் பார்த்துக் கொள்ளும். ஒரு மாட்டிற்கு இரண்டு பேர் காய்ந்த புல்லை போடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த நிறுவனம் தான் புல்லைப் பற்றியதான காரியத்தில் வணிக அடையாளமாயிருக்கும். மந்தை மேய்ப்போன் மாடுகள் உள்ளே போகும் போது அங்கு நின்றுக் கொண்டு அதை எண்ண வேண்டும். அங்கு உள்ளே எத்தகைய அடையாளமிடப்பட்ட (branded) மாடுகள் உள்ளே செல்கின்றன என்பதை அந்த உத்தியோகஸ்தன் பார்வையிட வேண்டும். ஏனெனில்அங்கு அநேக மாடுகளுக்கு அநேக காளைகள் என்ற விதமாக இருக்கும். ஹெரிபோர்ட் என்ற சங்கத்தின் சுத்தமான பூரணமான சாதி மாடுகள், காளைகள் தவிர வேறொன்றும் அங்கு உள்ளே பிரவேசிக்க முடியாது. ஏனெனில் அவைகள் ஹெரிபோர்ட் சங்கத்திற்குரியவைகளாகும். அங்கு அவைகள் பதிவு செய்யப்பட்டவைகளாகும். அது அவ்விதமாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் மந்தையின் சாதி சரியாக இருக்க வேண்டுமென்ற காரணத்தினால். 5மந்தையின் உத்தியோகஸ்தன் மந்தையானது உள்ளே செல்லும்போது அதை எண்ணுவதை நான் கவனித்தேன். நான் பார்த்த வரை இதுவரை ஒரு சமயமாவது அவன் அம்மாடுகள் எந்த அடையாளத்தை தங்கள் மேல் பெற்றிருக்கின்றன. (மாட்டின் தோலில், அது எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதின் அடையாளம் சூட்டுக் கோலினால் இடப்பட்டிருக்கும் - தமிழாக்கியோன்) என்பதைக் குறித்து பரிசீலித்ததே கிடையாது. உதாரணமாக, கிரிம்ஸ் என்ற நிறுவனம் (Grimes); டயமண்ட் பார்; (Diamond Bar) எங்களுடையது டர்க்கி டிராக் (Turkey Track) பின்பு டிரிபாட் (Tripod) என்பன போன்ற விதவிதமான குறியிட்ட மாடுகள் அங்கே காட்டிற்குள் செல்லும். ஆனால் அந்த உத்தியோகஸ்தன் பரிசீலிப்பதெல்லாம் ஒவ்வொரு மாட்டின் காதிலும் சிகப்பு அடையாளமான தகடு அதின் காதில் மாட்டப்பட்டிருக்கின்றதா என்பதையே. ஹெரி போர்ட் என்ற சங்கத்தின் பூரணமான சாதி மட்டுமேயல்லாமல் வேறெதும் உள்ளே நுழைய முடியாது. (ஹெரிபோர்ட் சங்கம் அவைகளை வாங்கி அந்த சிகப்பு அடையாளத்தை அவைகளின் காதில் மாட்டியிருக்கிறது - தமிழாக்கியோன்). 6“நியாயத்தீர்ப்பில் காரியம் அவ்விதமாகத்தானிருக்கப் போகிறது” என்று அங்கே நான் அமர்ந்துக் கொண்டு அவற்றை கண்டபோது நினைத்தேன். நாம் பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, அல்லது பெந்தெகொஸ்தே என்ற எந்த குறியமைப்பினின்று வந்தோம் என்பதை குறித்து அவர் ஒருபோதும் காணப் போவதில்லை. மாறாக அவர் இரத்தத்தின் அடையாளத்தைத் தான் கவனிக்கப் போகிறார். அது ஒன்று மட்டுமே நம்மை உள்ளே அழைத்துச் செல்லும். ஏனெனில் இரத்தத்தின் கீழில்லாத யாதொன்றும் மகிமைக்குள் பிரவேசிக்க இயலாது. கிறிஸ்துவில் தேவன் எதை செய்தார் என்பதை ஏற்றுக் கொள்வதே அந்த இரத்த அடையாளமாகும். பாருங்கள், நமக்கு நாமே ஏதொன்றாகிலும் செய்ய இயலாதவர்களாயிருக்கிறோம். ஏனெனில் நாம் முற்றுமாக தோல்வியுற்றவர்களாயிருக்கிறோம், நமக்கு வழியேதும் இல்லை. மனிதன் பாவம் செய்தபோது, தனக்கும் தேவனுக்கும் இடையே இருந்த தொடர்பை கடந்து சென்றுவிட்டான். அவன் திரும்பி வருவதற்கு வழியேதுமில்லாதிருந்தது. ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், ஒரு பதிலியை ஏற்றுக் கொண்டார். இன்று நமக்காக இருக்கும் அந்த பதிலி இயேசு கிறிஸ்துவே. தம்முடைய குமாரனின் இரத்தம் என்னும் ஓர் காரியத்தை மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்படுவதாயுள்ளது. 7கடந்த மாலையில் லைஃப் (Life) கூடாரத்தில் நமக்கு மகத்தான நேரம் உண்டாயிருந்தது. பரிசுத்த ஆவியானவர் மகிமையாக நம்மிடையே அசைவாடினார். அத்தகைய காரியத்தை தான் நாம் எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தான் எங்கிருந்து வந்தானென்றும், இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறானென்றும், இதன் பின்பு எங்கு செல்கிறான் என்பதைக் குறித்தும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அநேக அருமையான புத்தகங்கள் நம்மிடையேயுள்ளன. மனித தத்துவங்கள் என்ற அருமையான புத்தகங்களை நான் படிக்க நேர்ந்தது. அவைகளெல்லாம் அருமையான புத்தகங்களாயிருந்தாலும் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், எங்கு போகப் போகிறீர்கள் என்பதை கூற முடியும். அப்புத்தகம் வேத புத்தகமேயன்றி வேறல்ல. வார்த்தை தேவனாயிருக்கிறது. அப்புத்தகத்தை நாம் விசுவாசிக்கிறோம். இந்த நாளில் அப்புத்தகத்திற்காகத் தான் நாம் நிலைநிற்க வேண்டும். நாம் யாரென்பதையும், எங்கு போகிறோம் என்பதையும் தெரிவிக்க அது வாக்குறுதியளிக்கிறதாயிருக்கிறது. 8சில நாட்களுக்கு முன்பு தேவ சபையின் ஆண்டர்சன் (Anderson) இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சரித்திர ஆசிரியருடைய குறிப்பொன்றை படித்துக் கொண்டிருந்தேன். அது எந்த காலம் என்பதைக் குறித்து எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அதில் கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்பு பல நூறு ஆண்டுகள் கழிந்தது? ஒரு ஊழியக்காரன், அப்பொழுது தேவதூத தீவு என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிற்கு வந்து அத்தேசத்தின் ராஜாவை கிறிஸ்துவத்திற்கு மனந்திரும்ப வைக்க முயற்சித்தார். அவர்கள் பெரிய நெருப்பு மூட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு சிறு அடைக்கலான் குருவி அந்த நெருப்புமூட்ட வெளிச்சத்தினிடமாக பறந்து வந்து அந்த வெளிச்சத்தை சுற்றி வலம் வந்த பின்பு இருட்டினுள் மறைந்து சென்றுவிட்டது. எல்லா நடப்புகளும் தேவனுடைய மகிமைக்காக நடைபெறுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அவரில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறுகிறது என்பதை அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதையும் நான் விசுவாசிக்கிறேன். 9அந்த பரிசுத்தவான் ராஜாவைப் பார்த்து, “நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள், எங்கு செல்கின்றீர்கள்?” என்ற கேள்வியை கேட்டார். அந்த பரிசுத்தவான் மேலும், “நாம் எந்த அறியப்படாத இடத்தினின்று வந்தோம் என்றும் அந்த அறியப்படாத இடத்திற்கு திரும்ப செல்கிறோம் என்ற காரியத்தை இந்த வேதாகமானது கொண்டதாயிருக்கிறது” என்று கூறினார். இக்காரியத்தை அந்த ராஜா அந்த இரவு முழுவதும் தியானித்து விட்டு பின்பு அடுத்த நாள் காலையில் அவரும் அவருடைய வீட்டாரும், பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். இக்காரியம் கடைசி அப்போஸ்தலனின் மரணத்திற்கு பின்பு ஏறத்தாழ 400 வருடங்கள் கழித்து நிகழ்ந்தது. 10இப்பொழுது, நாம் இங்கு கூடி வந்திருக்கிற நடபடிகள், ஓர் காலை உணவை அருந்துவதற்காக மட்டும் என்பதல்ல என்று நான் நினைக்கிறேன். அத்தகைய காரியத்தை நாம் மெச்சிக் கொண்டாலும் காரியம் அதுவல்ல. நான் மிகவும் களைப்புற்றவனாய் இருந்தேன். ஆகவே சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடிவில்லை. ஆகவே நான் அதிக நேரம் கடந்து வந்தேன். ஆனால் இந்த நடபடிகள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நடைபெறுகிறது என்று நான் நினைக்கிறேன். 11இப்பொழுது, காலையில் வேதத்திலிருந்து ஓர் மூலவார்த்தையை எடுத்து வாசிப்போம்; வாலிபர்களுக்கும் பெரியோர்களுக்குமாக சேர்த்து விசேஷமாக ஷிரிப்போர்ட்டிலுள்ள வாலிபருக்கு பேசத் தக்கதாக கர்த்தர் என் இருதயத்தில் இக்காரியத்தை வைத்தார் என்று தெரிகின்றது. ஏனெனில் இக்கூட்டம் வாலிபர்களுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாயிருக்கிறது. ஏசா. 6-ம் அதிகாரம் 1-ம் வசனத்திலிருந்து ஆரம்பித்துப் படிப்போம். “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்க கண்டேன். அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள். அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிலிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை முடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை முடி, இரண்டு செட்டைகளால் பறந்து ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டு சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து என்னிடம் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு; இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா. 6:1-8 12இதினின்று செல்வாக்கு என்னும் பொருளைக் குறித்து பேச விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் இதைக் குறித்து, விசுவாசிக்காமலிருக்கலாம். ஆனால் நாம் கவர்கிறவர்களாயிருக்கிறோம். நான் அநேக சமயங்களில் அடக்க ஆராதனைகளில் பிரசங்கிப்பதுண்டு. அச்சமயங்களில் இறந்து போனவரைக் குறித்து அதிகமாக நான் கூற முயற்சிப்பதில்லை. மேலும் அவ்விதம் செய்ய அதற்கு அவசியமேதும் இல்லை. ஏனெனில் இறந்து போன மனுஷனோ அல்லது மனுஷியோ யாராயிருந்தாலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையானது மனுஷருக்கு முன்பாக, நான் கூறுவதைக் காட்டிலும் அதிக சத்தமாக பேசுகிறதாயிருக்கிறது. மனுஷர்களுடைய அபிப்பிராயத்தை நான் ஒருபோதும் மாற்ற முடியாது. அன்னாருடைய வாழ்க்கையே அவர் யாரென்பதற்கு சாட்சியாயிருக்கிறது. 13நாம் செய்கின்ற காரியங்கள் மற்றவர்களிடமாக என்ன செல்வாக்கை (கவர்ச்சி) உண்டாக்குகின்றது என்பதை நாமறிய மாட்டோம். “சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே”. (1கொரி. 3:2) என்று வேதாகமம் உரைக்கின்றது. அதாவது பொது ஜனத்திற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையானது அதிக சத்தமாக வாசிக்கப்படுகின்றது. உங்கள் சாட்சி உங்கள் வாழ்க்கைக்கு எதிர்மறையாயிருக்குமானால் அதினால் பிரயோஜனம் ஒன்றுமிராது. உங்களுக்குள் இருக்கும் காரியம் என்னவென்று மனுஷரால் அறியப்படுமேயன்றி நீங்கள் என்ன அதிகமாய் பேசுகிறீர்களென்பதல்ல. நீங்கள் ஒருவரிடம் ஒரு காரியத்தைக் குறித்துப் பேசி, “இது அதுதான், அது அவ்வாறுதான்” என்று கூறலாம். ஆனால், உங்கள் வாழ்க்கை நீங்கள் பேசுவதற்கு எதிர்மாறாக இருக்குமேயானால், நீங்கள் அதன் மூலம் வெளிக்காட்டும் சாட்சியானது மற்றவர் உங்களைக் குறித்து பேசுவதைக் காட்டிலும் அதிக சப்தமாக பேசுகிறதாயிருக்கின்றது. ஆம், அது உண்மை. ஆகவே ஒவ்வொரு நாளும், நாம் வாழ்கின்ற வாழ்க்கையானது ஒரு செல்வாக்கை (கவர்ச்சியை) கொணர்ந்து நமக்குள் என்ன இருக்கிறதென்பதை அது நிரூபித்து காட்டுவதாயுள்ளது. அதை நீங்கள் மாற்ற இயலாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளிருப்பதை பிரதிபலிக்கின்றவனாயிருக்கிறான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும், கிறிஸ்தவர்களாயிருக்கும் சாட்சியைக் குறித்தோவென்றால், ஒரு மனிதனோ, மனுஷியோ, வாலிபனோ, அல்லது வாலிப ஸ்திரீயோ அடைந்துக் கொள்ளக் கூடிய மிக பயபக்தியான ஒரு காரியமாகும். ஒரு மனிதன் கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொள்வானென்றால், அவன் கிறிஸ்துவுக்கு பிரதிநிதியாகும் ஸ்தானம் வகிக்கப் போகிறான். ஆகவே அத்தகைய மனிதன் அவன் அசையப் போகும் ஒவ்வொரு அசைவையும் குறித்து கவனமுள்ளவனாயிருக்க வேண்டும். ஏனெனில் தேவன் அவனுக்குள் என்ன செய்திருக்கிறார் என்பதை அவனின் உள்புறமானது பிரதிபலிப்பதை யாராகிலும் ஒருவர் கண்காணித்துக் கொண்டிருப்பார். 14சில காலங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா தேசத்தில் ஒரு ஜலசந்தியின் மேல் பாலமானது கட்டப்பட இருந்தது. ஆகவே அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பாலம் கட்டும் மனிதர்களை அழைத்தார்கள். ஆனால் அமெரிக்க மனிதர்கள், “மணற்பாங்கு அதிகமாயிருப்பதினால் பாலமானது கட்டப்பட்டால் நிலை நிற்காது” என்று கூறினார்கள். ஆகவே அவர்கள் அங்கு பாலம் கட்டும் தொழிலை மேற்கொள்ள இயலாமற் போயிற்று. ஆகையால் உலகமெங்கும் உள்ள பாலம் கட்டுவோருக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனாலும் ஒருவராகிலும் அந்த இடத்தில் பாலம் அமைக்க முன்வரவில்லை. 15கடைசியாக, இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு நிறுவனத்தைச் சார்ந்த ஓர் மனிதன் அந்த இடத்தை பரிசோதித்துப் பார்த்த பின்பு, அந்த தொழில் ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்ள முன் வந்து, தான் அங்கு பாலம் கட்ட முடிவெடுத்ததை அறிவித்தான். கவனியுங்கள், உலக புகழ் வாய்ந்த அவனுடைய பாலம் கட்டும் திறமை, அவன் கட்டயிருக்கும் இந்த பாலத்தை சார்ந்ததாயிருந்தது. அவன் முந்தின காலங்களில் கட்டியிருந்த காரியங்களெல்லாம் ஒரு பெரிய காரியமல்ல. ஆனால், இந்த பாலத்தை தன்னால் கட்ட முடியும் என்று அவன் கூறினதினால் அதுவே அவன் யாரென்பதை உண்மையிலே நிரூபிக்கப் போவதாக இருந்தது. அவன் அந்த பாலத்தைக் கட்டும் ஒவ்வொரு மறையையும், ஒவ்வொரு துண்டு உலோகத்தையும், மற்ற காரியத்தையும், ஆழங்களையும், அந்த ஆற்றின் துகள்கள் மேலுள்ள தண்ணீரின் அழுத்த சக்திகள் யாவற்றையும் சோதித்தறிந்தான் என்று அவர்கள் கூறினார்கள். அப்பொழுது மற்ற கட்டிட நிபுணர்கள் அங்கு அவனை சுற்றி நின்றுகொண்டு, “இது நிற்காது. இது விழுந்து விடும்” என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த பாலம் கட்டி முடிந்த பின்பு அதின் பிரதிஷ்டையன்று, அங்கு அணிவகுத்து சென்ற அணிவகுப்பிற்கு அவனே தலைமை தாங்கி அந்த பாலத்தின் மேல்கடந்து சென்றான். ஏன் அவ்விதம் செய்தான்? அந்த பாலம் நிலைநிற்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனெனில் அவன் அதின் மேல் செய்த அவனுடைய வேலையானது முற்றுமாக சோதித்து அறியப்பட்டதாயிருந்தது. 16கிறிஸ்தவ வாழ்க்கையில் அத்தகைய மகத்தான காரியத்தைத் தான் நாம் எதிர்நோக்குகிறவர்களாயிருக்க வேண்டும். மானிடவர்க்கம் என்றோ ஓர் நாள் இவ்வுலகை விட்டு கடந்து செல்ல ஒரு பாதையான பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதாயிருந்தது; ஒரு தூதனோ, சேராபீன்களோ, அல்லது கேராபீன்களோ யாராலும் அக்காரியத்தைச் செய்ய இயலாது. தேவன் தாமே கீழிறங்கி மனித ரூபத்தில் காணப்பட்டு வழியுண்டாகும்படி பாலத்தை அமைத்து கல்லறையினின்று மகிமைக்கு அவரே முதலாவதாக கடந்து சென்றார். ஆம், அது நிச்சயமாக ஓர் பிரதிபலிப்பை உண்டாக்கிற்று. அவருடைய சரீரத்திலிருந்த ஒவ்வொரு நரம்பும், அவரின் ஒவ்வொரு சிந்தனைகளும், அவரிலிருந்த எல்லா வல்லமையும் சத்துருவினால் சோதித்தறியப்பட்டது. மரண பரியந்தம் அவர் அந்த சோதனைகளுக்கு நிலைத்து நின்று அதை ஜெயித்தார். 17இக்காலையில் நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த வாலிபனான உசியா ஏசாயா தீர்க்கதரிசியின் கதாநாயகனாயிருந்தான். உசியாவின் நாட்களில் இந்த இளம் தீர்க்கதரிசியான ஏசாயா வாலிபனாகிய உசியாவை கவனித்துக் கொண்டிருந்தான். ஏனெனில் உசியா ஓர் மகத்தானவனாயிருந்தான். உசியா ஓர் நல்ல குடும்பத்தினின்று வந்தவனாயிருந்தான். அவனுடைய தாயும், தகப்பனும் தேவன் பேரில் உறுதியான விசுவாசம் கொண்டவர்களாயிருந்தார்கள். அவர்கள் தங்கள் பிள்ளையை தேவனை மதிக்கவும் அவரை சேவிக்க தக்கதாகவும் வளர்த்திருந்தார்கள். அமெரிக்காவிலும், முழு உலகிலும் இன்றுள்ள மிகப் பெரிய குறையென்னவென்றால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியான பக்தியுள்ளவர்களாய் இல்லாமலிருப்பதே. இன்றுள்ள பெற்றோர்கள் வார்த்தையின் ஒழுங்கினின்று விலகிச் சென்றுவிட்டனர். உலகத்தின் நவநாகரீகத்திற்கு அதிகமாக சென்றுவிட்டனர். சபைகளும் அதையே தான் செய்துவிட்டன. அவ்விதமாக காரியத்தை தளரவிட்டு சபைக்குள் நாம் உலகத்தைக் கொண்டு வந்துவிட்டோம். அதன் காரணமாகத் தான் நாம் இன்று இப்படிப்பட்ட காலத்தைப் பெற்றிருக்கிறோம். இதை இங்கிருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு முன்பாக மிகவும் பணிவுடன் கூறுகிறேன். பிள்ளைகள் இன்று தவறான காரியங்களையும் தவறான நடத்தைகளையும் அதிகமாகப் பெற்றிருப்பதன் காரணம் அவர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் குடும்ப வாழ்வின் சூழ்நிலையில் பெற்றுக் கொண்ட முன்மாதிரியே. “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்ற காரியத்தில் நான் இன்னுமாக விசுவாசியாயிருக்கிறேன் (நீதி. 22:8). 18இந்த வாலிபனாகிய உசியா தன்னை கவர்ந்திருக்கத் தக்கதான பெற்றோர்களின் வழி நடத்துதலில் வளர்ந்து வந்தவனாயிருந்தான். அமெரிக்கர்களுள் மிக மகத்தானவர் என்று நான் நினைக்கும் இந்த ஆபிரகாம் லிங்கனை கவனியுங்கள். எல்லா மதிப்பிற்கும் மரியாதைக்கும் அவர் நிச்சயமாக பாத்திரராயிருந்தார். இன்னும் அதைக் காட்டிலும் அதிகம் என்று கூட சொல்லலாம். அவருக்கு இருந்த பலவீனமான பகுதி என்னவென்றால், மணலை தமது எழுது தாளாக பயன்படுத்தி அதின் மேல் எழுதி தனது கல்வியை பயிலுவதைத் தவிர வேறு வழியில்லாதிருந்தது. ஏனெனில அவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மோசமான ஆரம்பத்தைக் கொண்டிருந்ததே. அவர் தம்முடைய 21வது வயது வரை அவருக்கு சொந்தமாக வைத்திருந்த புத்தகங்கள் இரண்டுதானிருந்தது என்று நாமறிகிறோம். அதில் ஒன்று பரிசுத்த வேதாகமம் மற்றொன்று மோட்சப் பிரயாணம் அல்லது பாக்ஃஸ் என்பவர் எழுதிய “இரத்த சாட்சிகள்” என்ற புத்தகமே. “எந்த புத்தகத்தை மனிதன் படிக்கின்றானோ அதுதான் அவன் பெற்றுக் கொள்ளக் கூடிய சக்தியாயிருக்கிறது”. 19இன்று நம்மிடையேயுள்ள காரியம் அதுதான். இன்று நமது சந்தைகள் அசிங்கமும், அசுத்தமுமான காரியங்களால் நிறைந்து அவைகளின் மூலம் நமது வாலிபப் பிள்ளைகளின் சிந்தைகளை விஷமாக்கி பின்பு நாம் பிள்ளைகளின் மேல் அந்த பழியை போடுகிறவர்களாயிருக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அத்தகைய புத்தகங்களை நமது அலமாரிகளினின்று அகற்றும் அளவிற்கு சரியான காரியத்தை செய்ய நிலைநிற்பதில்லை. அத்தகைய காரியங்கள் நம்மைதான். பொறுத்திருக்கின்றது என்பதை நான் அநேக சமயங்களில் நினைப்பதுண்டு. பிள்ளைகள் கவர்ந்திழுக்கப்படத் தக்கதாக நாம் கூட தளர்ச்சியாயிருந்து அத்தகைய அசிங்கங்கள் நம்முடைய வீடுகளுக்குள் வர அனுமதித்துவிடுகிறோம். ஆனால் இந்த உசியா சரியான விதமாக வளர்க்கப்பட்டவனாயிருந்தான். II நாளாகமம் 26-ம் அதிகாரத்தில் அந்த சரித்திரத்தை நீங்கள் படிக்கலாம். அவனுடைய தகப்பனார் மரித்த பின்பு தன்னுடைய 16வது வயதில் அவன் ராஜாவானான். நல்ல பயபக்தியுள்ள பெற்றோரின் பின்னணியைப் பெற்றவனாக தன் ராஜாங்கத்தைத் துவங்கி சரியான காரியம் எதுவோ அதையே அவன் செய்தான். அக்காலத்தின் மெச்சத் தக்க அபிப்பிராயங்களுக்கும், அரசியல்களுக்கும் அவன் ஒருபோதும் தன்னை அர்ப்பணிக்காமல் தேவனை சேவித்தவனாயிருந்தான். புகழ்ச்சியான அபிப்ராயங்களும், அரசியல்களும் எதிர்மறையாக சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு மனிதன் எது சரியான காரியமோ அதற்காக நிலைநின்று நேர் பாதையில் செல்பவனாயிருக்கும் போது அத்தகைய நல்ல மனிதனுடைய வாழ்க்கை ஓர் நல் முன்மாதிரியாயிருக்கும். 20ஜனாதிபதி கென்னடி கொலை செய்யப்பட்ட பின்பு இன்று நமக்கு வந்திருக்கும் ஜனாதிபதி ஜான்சன் அவர்கள் தனக்காக ஜெபம் செய்யும்படி நாட்டிலுள்ள எல்லா தேவ ஊழியர்களையும் கேட்டுக் கொண்டார். அந்த மனிதனிலிருந்த அச்செய்கைக்காக நான் மெச்சினேன். ஏனெனில் தனக்கு உதவி செய்ய தேவனை அழைக்கிறார் பாருங்கள். அவர் ஒரு விசுவாசிாயிருந்து தேவன் மேல் தன் நம்பிக்கையை வைத்திருக்கிறார் என்று நான் அறிகிறேன். அத்தகைய மனிதன் தான் நமக்குத் தேவை. 21உசியாவின் நாட்களில், அவனுடைய ராஜாங்கம் மிகவும் பரம்பி அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லை மட்டும் சென்றது. அவனுடைய ராஜாங்கம் சாலமோனின் ராஜாங்கத்திற்கு அடுத்ததாக வரும் அளவிற்கு மிகவும் மகத்தானதாக ஆயிற்று. கர்த்தரின் மகிமை அவனோடு இருந்தது. வாலிப ராஜாவாகிய உசியாவின் அரசாட்சியின் நாட்களில் இளம் தீர்க்கதரிசியான ஏசாயா அரண்மனைக்குள் கொண்டு வரப்பட்டதினால், இந்த ராஜாவை ஏசாயா கவனித்துக் கொண்டிருந்தது அவனுக்கு மிகவும் பிரயோஜனமான காரியமாக இருந்தது. தேவன் அந்நாட்களில் ராஜாவை ஆசீர்வதித்து நலமானதை செய்ய எவ்வளவாய் செல்வாக்கு அருளியிருக்கிறார் என்பதை ஏசாயா என்னும் இந்த இளம் தீர்க்கதரிசி பார்த்தான். சுற்றியுள்ள எல்லா நாடுகளும் அவனுக்கு காணிக்கையை செலுத்தினார்கள்; யுத்தம் ஓய்ந்திருந்தது. இவையெல்லாம் ஏசாயாவிற்கு அது ஓர் பெரிய பாடமாக அமைந்திருந்தது. தேவன் தம்முடைய வார்த்தைக்கும் அவருடைய கற்பனைகளுக்கும் உத்தமமாயிருக்கிறவர்களை எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்றதொரு காரியத்தை ஏசாயா கண்டு பிடித்தான். உசியா ஏசாயாவிற்கு முன்பு ஓர் முன்மாதிரியைப் படைத்தான். அது எவ்வளவு ஒரு மகிமையான ராஜாங்கமாய் இருந்திருக்கும்! 22இங்குதான் கிறிஸ்துவத்தின் சாட்சியை நாம் பார்க்கிறோம், கடந்த கால வாழ்க்கை எவ்வளவு தான் மகத்தானதாயிருந்தாலும், அதே வழிதான் முடிவு வரை காணப்பட வேண்டும். இந்த உசியா தான் “பலப்பட்டாயிற்று” அல்லது பத்திரமாயிருக்கிறோம் என்ற இடத்திற்கு வந்த போது, தன் இருதயத்தில் மேட்டிமையான எண்ணத்தினால் தன்னை உயர்த்தினான். தனக்கு யாரும் ஒன்றும் கூற இயலாது ஒரு நிலைக்கு அவன் வந்தான். இன்றைக்கு அநேகருடைய முன்மாதிரி அவ்விதமாயில்லையா? நம்முடைய கிறிஸ்தவ தலைவர்களிடம் கூட அத்தகையக் காரியத்தை நாம் காண்கிறோம். ஏறத்தாழ தங்கள் வாழ்நாள் முழுமையும் அவர்கள் ஊழியம் செய்து பின்பு ஒரு முக்கிய பதவியான கண்காணி அல்லது ஒரு செல்வாக்கு நிறைந்த மனிதன் என்ற இடத்திற்கு அவர்கள் வரும்போது அவர்கள் தங்களை உயர்த்துகிறவர்களாயிருக்கிறார்கள். ஊழியக்களத்திலிருக்கும் சுவிசேஷகர்களை நாம் பார்க்கிறோம். தேவன் அவர்கள் ஊழியத்தை ஆசீர்வதிக்கிறார். ஜனங்கள் மத்தியில் தாங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிட்டோம் என்ற நிலையைப் பெற்றுக் கொள்ளும்போது, தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய விரும்பி அதனால் பரவாயில்லையென்ற நிலையை அடைகின்றனர். 23இப்பொழுது, நான் அநேகரைக் குறித்து யோசித்து அதிசயித்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை மகத்தான் மனிதர்கள், ஊழியக்காரர்கள் தேவனால் உபயோகிக்கப்பட்டு முடிவில் தேவனுடைய வார்த்தை தங்களுக்கு அதிகம் தெரியும் என்ற உணர்விற்கு வந்து இனி ஒருபோதும் ஜெபம் செய்வதற்கும் கூடநேரம் இல்லாமல் போகும் நிலைக்கு வருவதை நாம் காண்கிறோம். தேவனோடு தனிமையாக நேரத்தை செலவழித்து இனிமைான ஆவியுடன் ஜனங்களுக்கு முன்பு வருவதற்கு தன்னை ஆயத்தப்படுத்துவதற்கு பதிலாக ஒரு சமுதாய சந்திப்பு, யாரையாகிலும் சந்திக்க செல்லுதல், இரவு விருந்து அல்லது ஏதாகிலும் ஓர் களியாட்டுகளுக்கு செல்லுதல் என்று அவர்களுடைய நடவடிக்கை அமைந்துவிடுகின்றது. மனிதனுக்கும் தேவனுக்கும் ஒரே சமயத்தில் ஊழியம் செய்ய உங்களால் கூடாது. தேவனுடைய ஊழியக்காரன் என்பவன் அவருக்கென்று பிரத்தியேகமாக தனிமையானவனாக இருக்க வேண்டும். இதை ஜனங்கள் பார்க்கக் கூடுமானால் நலமாயிருக்கும். ஊழியக்காரர்கள் ஜனங்களை சந்திக்க வேண்டும் என்று போகும் போது சில உபகாரங்களை செய்வதில் பிணைக்கப்பட்டுவிடுவார்கள். ஏனெனில் ஜனங்களுக்கு 'இது தேவை', 'அது தேவை' என்ற விதமாக தேவைகள் உண்டாயிருக்கும். ஆக இவ்விதமான காரியங்களில் தேவ மனிதன் சிக்குண்டு சிந்தனையில் கிழிக்கப்பட்டவனாக தன்னுடைய அறைக்குள் சென்று தியானத்தை ஆரம்பிக்கும் போது, “இந்த காரியத்தை இன்னாருக்கு செய்யாவிடின் அவர் அதைக் குறித்து கேவலமாக யோசிப்பார்; அந்த நபருக்கு அதை செய்யாவிடின் அவர் கேவலமாக நினைப்பார்” என்ற விதமாக இருந்து பின்பு அவர் பிரசங்க பீடத்தினிடமாக நடந்தும் செல்லும் போது தான் எங்கு நிற்கிறார் என்பதை அறியாத வண்ணம் சிந்தையானது அந்த அளவிற்கு குழப்பமுற்றிருக்கும். இவ்விதம் ஏற்படா வண்ணம் அவர் நேரத்தை தேவனிடத்தில் செலவழித்திருக்க வேண்டும். அத்தகைய காரியங்களை நாம் பெற்றிருப்பது மிகவும் மோசமானதாகும். தேவ ஊழியக்காரர்கள் தேவனுடைய தலைவர்களல்ல. ஒரு தேவஊழியக்காரன் சமுதாய சேவைக்கென்று தன்னை முற்றுமாக பிரதிஷ்டை செய்தவனாயிருக்க வேண்டும். 24இக்காலை நேரத்தில் நான் ஊழியக்காரர்களுக்கு பேசிக் கொண்டிருப்பதினால், இன்னொரு முக்கியமான காரியத்தைக் குறித்து பார்க்க வேண்டும் என்று உணருகிறேன். ஒரு சபைக்கு முன்பாக நீங்கள் வரும்போது, ஒரு வேளை திரும்பவும் சந்திப்பீர்களோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொண்டு, நீங்கள் எதைக் கூறப்போகிறீர்களோ அதைக் குறித்து தேவனுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கின்றீர்கள் என்பதை உணர வேண்டும். ஆகவே, நீங்கள் பீடத்தினிடத்திற்கு வரும்போது எதைக் கூறினால் அது ஜனங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும் என்ற காரியத்தை தேவனிடத்தில் கேட்டு அவரை சார்ந்திருக்க வேண்டும். 25இன்றைக்கு ஊழியக்களத்திலுள்ள மகத்தான மனிதர்களை நாமெல்லாரும் அறிவோம். அதில் சிலர் தங்கள் சபையார் தங்களை சுற்றிலும் அமைந்து மிகவும் பாதுகாப்பாக உணர்வதால், தாங்கள் பாவம் செய்தாலும் கூட பரவாயில்லையென்று எண்ணுகின்றார்கள். ஊழியக்காரர்கள் தவறான பாதையை தெரிந்துக் கொள்வதைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். அநேக சமயங்களில், அவர்கள் பாதுகாப்பாக உணர்வதினால், “ஓ, நான் என்ன செய்தாலும் ஜனங்கள் அதை பொருட்படுத்துவதில்லை” என்று கூறுகிறார்கள். ஜனங்கள் அவ்விதமிருப்பார்கள் என் சகோதரனே, ஆனால் தேவன் அதை அனுமதியார், ஏனெனில், நீங்கள் அதைக் குறித்து தேவனுக்கு பதிலளிக்கப் போகிறீர்கள். உன்னுடைய சபையார் எவ்வளவுதான் கத்தி கூப்பாடு போட்டு உன் முதுகில் தட்டி, 'செய்தி மிகவும் அற்புதமாயிருந்தது' என்று கூறினாலும், அவர்கள் காதுகளை ஏமாற்றும் அளவிற்கு நீ ஒரு ஊழியக்காரனாக இருக்க கண்டிப்பாக முயற்சி செய்யாதே. நீ ஒரு கிறிஸ்துவின் ஊழியக்காரனாக ஜீவித்து வார்த்தையோடு தகுதியுள்ளவனாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த வார்த்தை உன் மூலமாக பிரதிபலித்து, உன் வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருக்கும் யாரையாகிலும் அதன் மூலம் நீ கவர்கின்றவனாயிருக்கின்றாய். வாலிபராயிருந்தாலும், வியாபாரிகளாயிருந்தாலும் காரியம் அதுதான். இந்த ராஜா பெருமையினால் மேட்டிமையானான். தான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறான் என்று ராஜா நினைத்து தான் என்ன செய்தாலும் அதை தேவன் அனுமதிப்பார் என்று எண்ணினான். 26ஒரு சமயம் நான் கிறிஸ்துவுக்காக வாலிபர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வாலிப கிறிஸ்துவ பையன் இருந்தான். அவன் தனது சபையைச் சேர்ந்த ராக் அண்டு ரோல் பாடகனாகிய ஒரு வாலிபனிடமாக மிகவும் கவர்ந்திழுக்கபட்டவனாகி, என்னிடம் வந்து, “அந்த நபர் மிகவும் உறுதியான கிறிஸ்தவர்களில் ஒருவர் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கூறினான். இந்த பையன் ராக் அண்டு ரோல் (ஒரு வகை மேற்கத்திய நடனம்) நடனமாடுதலில் ராஜா என்று அழைக்கப்பட்டான். அப்பொழுது நான், “இந்த வாலிபனுக்கும், யூதாஸ் காரியோத்திற்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது யூதாஸ் 30 வெள்ளிகாசு மட்டுமே பெற்றிருந்தான், ஆனால் இந்த மனிதன் கிறிஸ்துவை விற்றதற்காக கெடிலாக் கார்களின் திறனையும், கோடிக்கணக்கான டாலர்களையும் (மேற்கத்திய நாணயம்) பெற்றுக் கொண்டான் என்றேன். அதற்கு அவன், “ஐயா, பிரான்ஹாம் அவர்களே அத்தகைய காரியத்தை நீர் எவ்விதம் கூறலாம்? என்றான். “ஏனென்றால் அது உண்மையே”, என்று நான் சொன்னேன். 27அத்தகைய கிறிஸ்தவ பாடல்களை வாலிப பிள்ளைகளுக்கு முன்பாக பாடி, உலகத்திற்கு முன்பாக செல்லும் கவர்ச்சியானது இத்தேசத்திலுள்ள அநேக தவறான அமைப்புகள் கொண்டுவரும் காரியங்களை விட மகத்தான ஓர் இடறலை ஜனங்களுக்கு முன்பு எறிகிறதாயிருக்கிறது. இது ஒரு அவமானமான செயலாயிருகிறது. ஆனாலும் அது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்த கிறிஸ்தவ பாமாலைகளை அத்தகைய மக்கள் பாட அனுமதிக்காதவாறு சபையானது தனது ஸ்தானத்தில் எழுந்து நிற்க வேண்டும். தேவன் அளித்த அந்த வரத்தின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜீவியமோ அவர்கள் யார் என்று அவர்களுடைய வார்த்தையைக் காட்டிலும் அதிகமாக சத்தமிட்டு கூறுகிறதாயிருக்கிறது. அந்த மனிதர்கள் செய்வது போன்று விளையாட்டுகளை நடப்பித்து பின் எவ்விதம் நின்று கிறிஸ்தவ கீதங்களை பாடுகிறார்கள்? இது மாய்மாலத்தின் மிக உச்சக் கட்டமாயிருக்கின்றது. இத்தகைய காரியங்கள் கிறிஸ்தவ விசுவாசிகளின் மத்தியிலும் செல்கின்றதை நாம் காண்கிறோம். இந்த வாலிப பையன் என்னை நோக்கி, “நல்லது, அதைக் குறித்து நான் எவ்வாறு நினைக்கிறேன் என்பதைக் குறித்துக் கூறுகிறேன்; அவர் என்னை அதிகமாக நேசிப்பதினால், நான் எதை செய்தாலும் அவர் என்னை அனுமதிக்கிறார் என்பதே என் எண்ணம்”, என்றான். அதற்கு நான், “அவர் அவ்விதம் செய்யமாட்டார். அவர் ஒருபோதும் அதை செய்யவிட மாட்டார். இஸ்ரவேல் என்னும் தேசத்தையும், அவருடைய மனதிற்குகந்த தாசனாகிய தாவீதையும் கூட அவர்கள் விதைத்த ஒவ்வொரு விதையையும் அறுவடை செய்ய வைத்தார். நீயும் அவ்விதமே அறுப்பாய்” என்று கூறினேன். நாம் ஒவ்வொருவரும் கூட அவ்விதம் தான். அதை நாமறிந்திருக்கிறோம். 28உசியா தன் இருதயத்தில் அவ்வளவாய் மேட்டிமைக் கொண்டான்! இந்த வார்த்தையை நான் முழு சுவிசேஷ வணிகர் குழுவிற்கு பேச விரும்புகிறேன். ஒரு ஊழியக்காரனின் இடத்தை எடுக்கும் அளவிற்கு அவன் தன் இருதயத்தை மேட்டிமையாக்கினான். ஒரு ஊழியக்காரனாக அவன் அழைக்கப்படாவிடினும் - அத்தகைய ஸ்தானத்திற்கு வர முயற்சித்தான். நான் நினைக்கிறேன். அநேக சமயங்களில் இந்த வியாபார குழுக்களைச் சார்ந்த மனிதர்கள் தேவன் அவர்களை அவர்களின் வியாபாரங்களில் ஆசீர்வதித்து செழித்தோங்க செய்யும்போது, தாங்களும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அது தவறானதாகும். பிரசங்கிக்கும் காரியத்தை எப்பொழுதும் ஊழியக்காரனிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் சகோ. ஓரல் ராபர்ட்ஸ், “காரியங்களை தெளிவாக காக்க ஊழியக்காரர்களுக்கே கடினமாயிருக்கும் போது, அத்தகைய ஸ்தானத்திற்கு அழைக்கப்படாத மனிதன் அதினின்று விலகியிருப்பது நலம்” என்று கூறினார். பாருங்கள். அக்காரியத்தைப் பற்றி அறிந்து அதற்கென பிரதிஷ்டை செய்யப்பட்ட மனிதன் உங்களுக்குத் தேவையாயிருக்கின்றது. 29இது காரியத்தை நிரூபிக்கிறதாயிருக்கிறது. இந்த மனிதன் உசியா, மகத்தான, நல்ல மதிப்பிற்குரிய மனிதனாயிருந்த போதிலும், தூப பீடத்தின் மேல் கர்த்தருக்கு முன்பாக தூபங் காட்டும் தொழிலை எடுத்துக் கொண்டான் (IIநாளா. 2:18) பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசாரியர் மட்டுமே இக்காரியத்தை செய்யமுடியும். தேவன் தன்னை அதிகமாக நேசிக்கிறார், அவர் தனக்கு மிகவும் நல்லவராயிருக்கிறார் என்று நினைத்து அக்காரியத்தை தான் செய்யலாம் என்று எண்ணினான். ஆசாரியர் அவன் பிறகே ஓடி, (IIநாளா 2:18) “நீர் இந்த ஊழியத்திற்குப் பிரதிஷ்டை செய்யப்படவில்லை, பரிசுத்தமாக்கப்பட்ட லேவியர் தவிர வேறு யாரும் அந்த ஊழியத்திற்கு உகந்தவர்களல்லாதபடியினால் தேவன் அதை அனுமதிக்கிறதில்லை, நீர் அதை செய்யக்கூடாது” என்றான். தன்னுடைய ஸ்தானமல்லாத இடங்களை மனிதன் சென்று வகிக்க முயற்சிப்பதினால் இன்று இந்த உலகில் அநேக சமயங்களில் குழப்பம் நிலவுகின்றது. அத்தகைய ஓர் குறிப்பிட்ட நிலைக்கு அவர்கள் வரும்போது, தாங்கள் அழைக்கப்படாத ஸ்தானத்தை நிரப்புவதற்கு முயற்சிக்கின்றார்கள். 30ஓர் நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனாக நீர் இருந்தாலும் தேவன் உன்னை ஆசீர்வதிக்கும் பட்சத்தில் அவர் உன்னை எந்த நிலைக்கென்று அழைத்திருக்கிறாரோ அந்த நிலையில் நிலைத்திரு, நீ ஒரு குடும்பப் பெண்ணாக இருப்பாயென்றால் குடும்பப் பெண்ணாகவே நிலைத்திரு. அது வியாபாரமாயிருக்குமானால், அதிலே நிலைத்திருந்து தேவனை பிரதிபலிப்பாயாக அல்லது எந்த நிலைக்கு உன்னை அழைத்திருக்கிறாறோ, அதில் நிலைத்திரு. ஏனெனில், நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க விரும்பும் வேறொரு பெண்மணிக்கு உன்னிலுள்ள உண்மையான குடும்பப் பெண்ணின் தன்மையை நீ பிரதிபலிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நீ ஒரு நல்ல வியாபாரியாயிருப்பாயென்றால், உன்னுடைய ஜீவியம் அதுவாயிருந்து - உண்மையோடும், நேர்மையோடும் இயேசு கிறிஸ்துவை உன் வியாபாரத்தில் பிரதிபலிக்கட்டும். ஏனெனில் யாராகிலும் ஒருவர் உன் ஜீவியத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார். ஒரு நல்ல குடும்ப பெண்மணி தேவனுக்குத் தேவை. பள்ளியில் ஓர் நல்ல பிள்ளை தேவனுக்கு தேவை. அதே விதமாக ஒரு உண்மையான ஊழியக்காரனோ வியாபாரியோ அல்லது யாராகிலும் அவரை பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில் உங்களில் ஜனங்கள் கிறிஸ்துவைப் பார்ப்பார்கள். மற்ற உலகத்தார் என்ன செய்கிறார்களோ அதில் ஒரு காரியமும் உன்னையோ என்னையோ பொருத்ததல்ல. ஆனால் நம்முடைய ஜீவியத்தைக் குறித்தும், கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் அனுபவத்தைக் குறித்துமே நாம் தேவனுக்கு உத்திரவாதமுள்ளவர்களாயிருக்கிறோம். 31இப்பொழுது கவனியுங்கள், உசியா ஓர் ஊழியக்காரனின் ஸ்தானத்தை எடுக்க முயற்சிக்கையில் நீர் அவ்விதம் செய்ய வேண்டாம். அது உம்முடைய இடமல்ல. நீர் உம்முடைய ஸ்தானத்தை விட்டு நகர்ந்துவிட்டீர் என்று கூறிக் கொண்டிருந்த போது அவனுக்கு கோபம் மூண்டது. அவனுடைய முகமானது சிவந்து போகும் அளவிற்கு அவனுக்கு கோபம் வந்தது. அத்தகைய சமயத்தில் நாம், திருத்தத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். சிலர் அதை செய்வதில்லை. கூட்டங்களுக்கென்று அரங்கங்களுக்குச் சென்று அங்கு நான் அமர்ந்திருப்பேன், அச்சமயம் சில ஜனங்கள் அங்கு வந்து ஒரு சில நிமிடங்கள் அமர்ந்திருப்பார்கள், அவர்களுக்கு ஒத்துவராத காரியம் ஏதொன்றாகிலும் சொல்லிவிட்டேனென்றால், கோபப்பட்டு உடனே அங்கிருந்து சென்றுவிடுவார்கள் (சகோ. பிரான்ஹாம் தம் விரல்களை சொடுக்குகிறார்). 32சரி, இந்த உசியாவிற்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? தேவன் அவனை குஷ்டரோகத்தினால் அடித்தார். அந்த மனிதன் அவ்வியாதியோடே மாரித்தான். குஷ்டமானது பாவத்திற்கு உதாரணமாயிருக்கிறது. வார்த்தையினால் திருப்பப்படுவதை அவனால் சகிக்க முடியவில்லை. இந்நாட்களில் அநேக சமயங்களில் காரியம் அவ்விதமேயுள்ளது. “நல்லது, என் ஸ்தாபனம் இவ்விதம் விசுவாசிக்கின்றது. ஆகவே எனக்கு அதைக் குறித்து அக்கறையில்லை” என்கிறார்கள். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையை ஆராய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தேவன் ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்கப் போவதில்லை. மாறாக அவர் உலகத்தை தம்முடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போகிறார். அவருடைய வார்த்தை கிறிஸ்துவாயிருக்கிறது. கிறிஸ்துவே வார்த்தையாயிருக்கிறார். அவைகள் ஒன்றாயிருக்கின்றது. “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:8). ஜனங்கள் திருத்தப்படுதலை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யாமல், எரிந்து விழுந்துவிடுகிறார்கள். அதை சகிக்க முடிவதில்லை. 33உசியா ஓர் நல்ல மனிதனாயிருந்தாலும் அந்தக் காரியத்தை தான் சரியாக செய்தான். “நல்லது, அந்த உசியா கூட நல்லவனும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனாயிருந்தானே” என்று நீங்கள் சொல்லக் கூடும். அதைக் குறித்து ஒரு காரியமுமில்லை. ஆனால் அவன் தன்னுடைய ஸ்தானத்தில் எப்பொழுதும் தரித்திருக்க வேண்டுமே! ஏனெனில் அவன் ஒரு நீதியுள்ள ராஜாவாயிருப்பதின் செல்வாக்கை மற்றவர்களுக்கு பிரதிபலிக்க வேண்டுமென்று தேவன் அவனுக்கு ஒரு தருணத்தைக் கொடுத்தார். வார்த்தையானது அவன் ஒரு ஆசாரியனாக இருக்க அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவன் தூபங் காட்டச் சென்றான். அவனுடைய ஸ்தானத்தில் அவனை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் அதற்கு மாறாக அவன் ஒரு ஆசாரியனுடைய ஸ்தானத்தை எடுக்கக்கூடாது என்று அவனுக்கு வார்த்தையின் அழைப்புக் கொடுக்கப்பட்ட போது, யாரென்ன கூறினாலும் அதை அவன் செய்ய போன போது அவன் வார்த்தையினின்று அகன்று போனான். இன்று அத்தகைய சுபாவம் தான் அநேகரிடம் இருக்கின்றதல்லவா? அவர்கள் வார்த்தையின் திருத்துதலை ஏற்றுக் கொள்கிறதில்லை. ஆகவே தான் சபைகளின் சமஷ்டி அமைப்பதற்கு நாம் கட்டுப்பட்டு உலகமும் நாடும் எங்கு நோக்கி செல்கிறோம் என்பதை அறியாதவர்களாயிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பத்தாயிரமான அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டு தேவனுடைய அசைவு எங்கு இருக்கிறது என்பதை பார்க்காமலிருக்கிறார்கள். வேதம் கூறுவதைப் போன்று சடங்காச்சாரமானதும், மரித்ததுமாயிருக்கிறார்கள். இந்த லவோதிக்கேயா சபையானது. “வெதுவெதுப்பாயிருந்து தேவனுடைய வாயினின்று வாந்தி பண்ணப்பட்டதாயுள்ளது. கிறிஸ்துவானவர் வெளியே தள்ளப்பட்டு, உள்ளே வர முயற்சித்தாலும் வர அனுமதியாத காரியம் இன்றுள்ள பொருத்தமான காட்சியாயுள்ளது. ஏனெனில் மனிதன் தன்னுடைய ஸ்தானமானது தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறதென்பதை புரிந்து கொள்ளாதவனாயிருக்கின்றான். 34உசியா அதைக் குறித்து கருத்தாயிருந்திருக்க வேண்டும். ஞாபகம் கொள்ளுங்கள், இன்று நாம் உசியாவை ஒரு கிறிஸ்தவனென்றும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனென்றும் அழைக்கிறோம். அவன் ஒரு சாதாரண மனிதன் அல்ல, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். ஆயினும் திருத்தப்படுதலை சகிக்காதவனாயிருந்தான். வார்த்தை என்னதான் கூறின போதிலும் அவன் அதை புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் வார்த்தைக்கு முரணான காரியமாயிருந்தாலும் தேவன் அதைக் குறித்து தன்னை விட்டுவிடுவார் என்று நினைக்கும் அளவிற்கு தான் பாதுகாப்பாய் இருக்கிறான் என்று எண்ணினான். உலக முழுவதிலுமுள்ள ஜனங்களிடமும் காரியம் இன்று அவ்வாறேயுள்ளது. வார்த்தைக்கு முரணாக காரியம் இருந்தாலும் தேவன் தங்களை விட்டுவிடுவார் என்று எண்ணுகின்றனர். அவர் அவ்விதம் ஒருபோதும் செய்யமாட்டார். நாம் திருத்தப்படுதலுக்கு உட்பட்டு வார்த்தை திருத்துவதை சகிக்க வேண்டும். உசியா தனது பிடிவாதமான நடவடிக்கையினால் ஊழியக்காரன் சொன்னதைக் குறித்து கவனம் செலுத்தாமற் போனான். அவன் என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தானோ அதை செய்தான். இப்பொழுது அதை உங்கள் மனதிலே ஒரு நிமிஷம் நிறுத்தி அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள். 35தன் தலைமயிர் நரையாகிக் கொண்டிருக்கும் ஓர் தாயார், தன் வாலிப பிள்ளையைப் பார்த்து, “இனிமையானவனே, உன் தாயார் உன்னை வித்தியாசமாக வளர்த்து எடுத்தேன் அல்லவா? உன் வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பார்த்து உன் தாயாருக்கு என்ன செய்திருக்கிறாய் என்று நினைத்துப் பார். இனி அவ்விதம் செய்யாதே என்று சொல்லும்போது, முரட்டுத்தனமாக திருப்பிக் கொண்டு”, “உன் மதத்தை எடுத்துக் கொண்டு போ, என் இஷ்டப்படிதான் நான் செய்வேன்” என்று கூறி அத்தகைய தேவபக்தியுள்ள தாயாரை எவ்விதம் அவ்வாலிபப் பிள்ளை அவளின் முகம் நோக்கிப் பார்க்க முடியும்? அந்த வாலிபப் பிள்ளைக்கு நேரும் காரியம் என்ன? அத்தகையோருக்கு நேரும் காரியம் என்ன? அது முடிந்துவிட்டக் காரியம். அவர்கள் ஆவிக்குரியபிரகாரமாகவும், நல்லொழுக்கப் பிரகாரமாகவும், மாமிசப் பிரகாரமாகவும், மனநிலைமையின் பிரகாரமாகவும் அனேக மடங்குகள் இழுக்கப்பட்டவர்களாயிருக்கின்றார்கள். கிருபையினின்று முழுவதுமாக தறித்தெறியப்பட்டவர்களாயிருக்கிறார்கள். அப்படியானால் அத்தகையக் காரியம் ஒரு வாலிப பெண்ணுக்கானாலும், ஆணுக்கானாலும் பயங்கரமானதாகும். ஊழியத்திலிருக்கும் ஒரு மனிதன் ஒரு பெண் அல்லது தன்னை தேவனுடைய பிள்ளையென்று அழைத்துக் கொள்ளும் ஒரு கிறிஸ்தவன், தேவனுடைய கற்பனைகளை நோக்கிப் பார்த்த பின்பு அதற்கு தங்கள் முதுகைக் காட்டி, “எங்களுடைய ஸ்தாபனம் அவ்விதம் விசுவாசிப்பதில்லை” என்று கூறுவதை நினைத்துப் பாருங்கள். தேவ வார்த்தையின் செல்வாக்கு பெற்ற கிறிஸ்தவர்கள் நமக்குத் தேவை. கடைசி நாட்களின் தெரிந்தெடுக்கப்பட்ட சபைக்கென்று உதாரணமாயிருக்கின்ற அழைக்கப்பட்ட மனிதனோ அல்லது மனுஷியோ தாம் நமக்கு தேவையாயிருக்கின்றது. தேவனே, அத்தகையோரை எங்களுக்குத் தாரும்! அத்தகையோர் தாம், அவர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். 36அவன் தன் பிடிவாதத்தின் காரணமாக குஷ்டரோகத்தினால் அடிக்கப்பட்டான் என்று இந்த உசியாவைக் குறித்துக் காண்கிறோம். அதன் பின்பு அவன் ஒருபோதும் சுகம் பெறவில்லை. அவன் ஒருபோதும் சுகம் பெறவில்லை. குஷ்டரோகத்தின் வீட்டிலிருந்து மரிக்க அவன் தன்னை தேவ சமூகத்தினின்று பிரித்துக் கொண்டான். ஓ, மனிதனும், மனுஷியும் எளிதாக அந்த எல்லைக் கோட்டை கடக்க முடியும்! கிருபைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையேயுள்ள அந்தக் கோட்டை ஒரு வாலிப பெண்ணோ அல்லது வாலிப ஆணோ கடக்க முடியும். நாம் யாவரும் கூட! தவறுக்கும் உண்மைக்கும் இடையேயுள்ள அக்காரியத்தை வியாபாரிகளோ அல்லது யாரேனும் கூட கடக்கலாம். ஞாபகம் கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை மட்டுமே எப்பொழுதும் சரியானதாகும். “என்னுடைய வார்த்தையே சத்தியம், எந்த மனிதனின் வார்த்தையும் பொய்யே” என்று தேவன் கூறினார். 37உசியா அடிக்கப்பட்டான். இந்த வாலிப ஏசாயா இதை பார்த்த போது அது அவனுக்கு எப்படிப்பட்டதொரு பாடமாக அமைந்திருந்திருக்கும்! தன்னுடைய ஸ்தானத்தை விட்டு வெளியே செல்லும் வாலிபனோ அல்லது வயோதிபனோ யாராயிருந்தாலும் அதன் பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். உசியா எவ்வளவாக ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருந்திருந்தாலும், அவன் அதன் பலனை அனுபவித்தான். ஏசாயா இதன் மூலம் ஒரு மகத்தான பாடத்தைக் கற்றுக் கொண்டான். அது என்ன? தேவன் தம்முடைய மனிதனுக்கு அவன் ஸ்தானத்தை கொடுக்கிறார் என்பதே. நீ வகிக்க வேண்டிய ஸ்தானத்தை மனிதன் உனக்குக் கொடுக்க முடியாது. தேவன் தாமே உன் ஸ்தானத்தை உனக்கு கொடுக்க முடியும். இதை மறந்து போக வேண்டாம். தேவன் உன்னுடைய இடத்தை உனக்கு கொடுக்கிறார், ஆனால் நீ ஒருபோதும் உன்னுடையதல்லாத இன்னொருவருடைய இடத்தை எடுக்க முயற்சி செய்யாதே. 38மகா சங்கத்தை (Congress) சேர்ந்த உப்ஷா என்பவர் ஒரு சமயம் கூறினார். அங்கு கலிபோர்னியாவிலே கர்த்தர் எனக்கு ஓர் தரிசனம் காட்டி சுகம் பெற்றவர் இந்த மனிதர் தாம். அவர் அறுபத்து ஆறு ஆண்டுகள் சப்பாணியாயிருந்து, தேவனுடைய அற்புத செயலின்படி சடுதியாக அந்நேரம் தானே சுகம் அடைந்து, தன் சக்கர நாற்காலியையும், கக்க தண்டங்களையும் (crutches) தூக்கியெறிந்தார். ஷரிவா போர்ட் என்னுமிடத்தில் சாட்சி கொடுத்தவராயிருந்தார். அவர் இவ்விதமாக கூறுவதுண்டு. ஜியார்ஜியா என்னுமிடத்தின்று தெரிந்தெடுக்கப்பட்டு, அனேக வருடங்களாக அரசாங்க சட்டசபையைச் சேர்ந்தவராயிருந்தார். தென் மாநில பாப்திஸ்து சபையின் பிரதிநிதியாகவுமிருந்தார். பின்பு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அவருடைய நிலைமையின் காரணமாக தோற்றுப் போனார். சுவிசேஷ பாப்திஸ்து சபையின் ஊழியத்தின் நியமனத்திற்காக என் மேல் தன் கரங்களை வைத்த மேதகு ராய் டேவிஸ் அவர்கள் இந்த மனிதனை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் அவருக்கு முன் ஒரு போதும் அறிமுகமில்லாதவனாயிருந்தேன். அந்த இரவில் உப்ஷா அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த போது, ஆயிரமாயிரமான ஜனங்களின் முன்னிலையில், அவரின் பேர் சொல்லி பரிசுத்த ஆவியானவர் அழைத்து, அவர் யாரென்று கூறி, அவர் சுகம் பெற்றுவிட்டதாக அறிவித்தார். உப்ஷா அவர்கள் கக்க தண்டங்களின் உதவியின்றி, யாருடைய உதவியுமில்லாமலும் நடந்து மேடைக்கு வந்தார். அவருடைய வயது ஏறத்தாழ 70 ஆக இருந்த போதிலும் தான் முற்றிலும் குணமாக்கப்பட்ட தன் அடையாளமாக முன்பக்கம் குனிந்து தன் கால் விரல்களை தொட்டும் பின்னாக தன்னை வளைத்தும் காண்பித்தார். அவர் ஓர் மகத்தானவாக்கு வல்லவனாக இருந்து... தன் வாயின் வார்த்தையின் மூலம் இவ்விதம் ஓர் காரியத்தை தெரிவித்தார், “உனக்கென்று நியமிக்கப்படாத காரியத்தில் நீ மேன்மையாயிருக்க முடியாது” என்பதே. இது ஒரு அரசியல்வாதியின் பேச்சாக ஒலிக்கவில்லை. அவர் தெற்கத்தியனாக இருந்து இத்தகையதோர் வசனத்தை தெரியப்படுத்தினதின் காரணம் அவர் அதிகமாக சோதிக்கப்பட்டு அனுபவப்பட்டிருந்தார். அது மட்டுமல்ல அவர் ஒரு தேவ மனிதனாக இருந்து அவரின் மகத்தான நடத்தை ஜனங்களுக்கு ஓர் கவர்ச்சியாயிருந்தது. ஓர் சமயம் அவர் பில்லி கிரகாமின் கூட்டத்தில், அந்த வெள்ளை மாளிகையின் படிகட்டுகளின் மேல் நின்று, “நித்திய கரங்களின் மேல் சார்ந்து கொண்டிருக்கிறேன்” என்ற பாடலை உலகம் பூராவிலுமிருந்து வந்திருந்த ஜனங்களின் முன்பாக பாடினார். அநேக வருடங்களுக்கு பின்பு அத்தகைய சாட்சியுடனே மரித்தார். 39தேவன் தம்முடைய மனிதனை நியமிக்கிறார். ஆகவே நீ இன்னொருவனுடைய இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி செய்வாயானால் ஒரு மாம்சீகமான காரியத்தை உற்பத்தி செய்து முடிவில் அது நியாயத்தீர்ப்புக்குள்ளாகிவிடும். அதை உங்களால் செய்ய முடியாது. பாருங்கள்... தேவன் உங்களுக்கென்று ஓர் இடத்தை நியமிக்கின்றார். எந்த மனிதன் மேலும் தன் நம்பிக்கையை வைக்கக் கூடாது என்ற காரியத்தை ஏசாயா தெரிந்து கொண்டான். அந்த நேரத்தில் ஓர் மகத்தான ராஜா அங்கிருந்தான். அவனை சுற்றியிருந்த உலகம் அவனுக்கு கப்பம் கட்டுகிறவர்களாக இருந்தனர். ஆனால் அந்த ராஜா தன் ஸ்தானத்திலிருந்து விலகினதை ஏசாயா கண்டு மாமிச கரங்களின் மேல் நம்பிக்கை வைக்கக் கூடாதென்பதை உணர்ந்தான். அந்த காரியம் தீர்க்கதரிசியை ஜெபிக்கத் தக்கதாக தேவாலயத்திற்கு விரட்டியடித்தது. ஓ தேவனே! தங்களை கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளும் சபையாரோ அல்லது ஜனங்களோ இதை பார்க்க நேர்ந்து. அத்தகைய காரியம் அவர்களை எங்காவதொரு பீடத்தினிடமாக ஜெபிக்க விரட்டியடிக்கட்டும். ஓ, உன்னுடைய ஸ்தானமல்லாத இடத்தில் நீ மேன்மையாயிருக்க முடியாது. 40ஏசாயா தேவாலயத்தில் ஜெபத்தில் தரித்திருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததினால் தரிசனங்களை பார்க்கத் தக்கதாக அவன் உருவமைக்கப்பட்டிருந்தான். அவன் அதற்கென்று பிறந்தவனாயிருந்தான். ஆனாலும் தேவனிடத்திலிருந்து ஓர் தொடுதல் அவனுக்குத் தேவையாயிருந்தது. தேவன் அவன் தீர்க்கதரிசியாயிருப்பதற்கு அபிஷேகித்திருந்தார். அங்கே தேவாலயத்தின் தரிசனத்தில் உண்மையான ராஜாவை தரிசித்தான். அங்கு தேவன் வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டு, அவருடைய வஸ்திரத் தொங்கல் பூமியையும் வானங்களையும் நிரப்பினதைக் கண்டான். ஓர் உண்மையான உதாரணத்தை அங்கு அவன் கண்டான். வேறு வார்த்தையில் கூறப்போனால், “நானே உனக்கு முன்மாதிரியான உதாரணம். இங்கு நோக்கிப்பார்” என்ற விதமாக அத்தரிசனம் இருந்தது. நம்முடைய ஊழியத்தில் நம்மால் அதை மட்டும் செய்யக் கூடுமானால்! நான் இங்கு வாலிபருக்கும், ஊழியக்காரர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இதை பேசிக் கொண்டிருக்கிறேன். ஊழியக்காரர்களே. நாம் மட்டும் அவ்விதமாக இருக்கக் கூடுமானால், நலமாயிருக்கும். ஒரு பில்லிகிரகாமைப் போல் இருக்க விரும்புகிறேன். பில்லி கிரகாமைப் போல் காரியத்தை ஒன்று சேர்த்து அது எவ்விதம்; என்ன என்ன விதமாக தொகுத்துப் பார்க்கும் கல்வியறிவுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் பில்லி கிரகாமாக முடியாது. அதேபோல் பில்லி கிரகாம் என்னை போலாக முடியாது. பாருங்கள்? கிறிஸ்துவிலே நாங்கள் ஒவ்வொருவரும் வகிக்கத் தக்கதான் ஓர் இடமுண்டு. பில்லி கிராகாமின் இடத்தை எடுத்து நடிப்பதைப் போன்ற காரியம். உசியா செய்ததை போன்று அமைந்து தாறுமாறாக சென்றுவிடும். நீங்கள் எவ்விதமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்களோ அவ்விதமாகவே இருங்கள். 41ஏசாயா ஓர் தீர்க்கதரிசியாயிருந்ததினால் அவன் தேவாலயத்திற்குச் சென்று தேவன் என்ற உண்மையான உதாரணத்தைக் கண்டான். அங்கு சேராபீன்கள் தேவாலயத்தினூடே பறந்து சென்றன. கவனியுங்கள். ஓர் சேராபின் என்பது வல்லமையான வார்த்தையாயிருக்கின்றது. அது ஒரு தேவ தூதனல்ல. மாறாக அவன் ஓர் பலி எரிப்பவனாகயிருக்கின்றான். இந்த சேராபின் பாவ நிவர்த்தியுடன் சம்பந்தப்பட்டவனாயிருந்து, மனந்திரும்பின பாவி கிருபாசனத்தண்டை செல்வதற்கு வழிவகுக்கும் பொருட்டு பலி செலுத்துகிறவனாயிருக்கிறான். என்னே ஓர் ஸ்தானம். இவன் ஓர் தேவ தூதனைக் காட்டிலும் மகத்தான இடத்தை வகிக்கின்றவனாயிருக்கின்றான்! இந்த சேராபீன் தேவனுடைய பிரசன்னத்தில் பிரவேசித்து, செலுத்தப்பட்ட ஜெபங்கள் என்னும் பலியை எரிக்கின்றவனாயிருக்கின்றான். ஆனால் தேவ தூதர்களோ அதற்கு பின்னாக நிற்பவர்களாயிருக்கின்றனர். அதோ அவர்கள் அங்கு தேவாலயத்தினூடே பறந்து, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கூப்பிட்டார்கள். இந்த வாலிப தீர்க்கதரிசியின் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததை குறித்து நினைத்துப் பாருங்கள். அவன் அங்கு இருதயம் உடைந்தவனாயிருந்தான். அவனுடைய ராஜாவாகிய உசியா ஓர் ஊழியக்காரனுடைய ஸ்தானத்தை எடுக்க முயற்சித்து தேவனால் முழுவதும் தோற்கடிக்கப்பட்டவனாக, குஷ்டத்தினால், பீடிக்கப்பட்டான். ஆம் அவன் நோக்கிப் பார்த்த உதாரணம் ஓர் மனிதன். 42ஒருபோதும் ஒரு மனிதனை நம்ப வேண்டாம். அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அவன் ஓர் பரிசுத்த மனிதனோ அல்லது நல்ல மனிதனோ எனக்கு அதைக் குறித்து கவலையில்லை. அதை சற்று நான் திருத்தட்டும். பரிசுத்த மனிதன் என்றோ பரிசுத்தச் சபையென்றோ ஒன்றுமில்லை. மாறாக அது பரிசுத்த தேவனாயிருக்கின்றது; பரிசுத்த ஆவியாயிருக்கின்றது. பேதுரு ஒரு சமயம் மறுரூபமலையை “பரிசுத்த பர்வதம்” என்று அழைத்தான். அந்த மலை பரிசுத்தமானதில்லை. மாறாக பரிசுத்த தேவன் இந்த மலையில் அவர்களை சந்தித்தார். பரிசுத்த சபையென்று ஒன்றும் இல்லை; மாறாக சபையிலிருக்கும் பரிசுத்த தேவனாக அவர் இருக்கின்றார். பரிசுத்த மனிதன் என்றில்லை மாறாக பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதனில் கிரியை செய்கின்றார். மனிதன் தவறிவிடுவான். ஏனெனில் அவன் ஆரம்பத்திலிருந்தே தவறினவனாயிருக்கின்றான். மகத்தான மனிதன் என்று கருதப்படுபவன் விழுகின்றவனாயிருக்கின்றான். ஒரு போதும் உங்களில் யாராகிலும் ஓர் மனிதனை உங்கள் உதாரணமாக கொண்டு அவன் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்க வேண்டாம். தேவனை நோக்கிப் பாருங்கள். கிறிஸ்துவே உங்கள் உதாரணமாயிருக்கின்றார். 43ஏசாயா இப்பொழுது, தான் மிகவும் நேசித்ததான உசியா ராஜாவின் மேல் இருந்த தன் மனத்தை எடுத்துவிட்டான் என்பதை நாம் பார்க்கிறோம். ஓர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டுமானால் எதை அவன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள மேல் நோக்கிப் பார்த்தான். தேவன், தேவனே எல்லா மனுஷரின் வாழ்க்கையையும், சபையையும் ஆளுகை செய்கிறார் என்பதை தெரிந்துக் கொண்டான். இப்பொழுது அங்கு நடந்ததென்ன என்பதை நாம் கவனித்தோம். இந்த சேராபீன்கள், அவ்வாறு (Six) ஆறு செட்டைகளைக் கொண்டவர்களாய் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் தேவாலயத்தின் ஊடே பறந்து, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தராகிய தேவன் பரிசுத்தர், பரிசுத்தர்” என்று இரவும் பகலும் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பிரசன்னத்திலிருந்தனர். இங்கு ஏசாயா எதைப் பார்க்க வேண்டுமென்று தேவன் கூறுவதை கவனிக்கிறீர்களா? அது பரிசுத்தமே. தேவ சமூகத்தில் நாம் செலுத்த வேண்டிய மரியாதையே. 44நாம் முடிக்கும் முன்னர், இந்த தரிசனத்தை சற்று நிமிடங்கள் ஆராய்வோம். இந்த ஒவ்வொரு ஜீவனும் ஆறு செட்டைகளை உடையதாயிருந்தன என்று பார்த்தோம். இந்த செட்டைகளை முதலில் எடுத்துக் கொள்வோம். இரண்டு செட்டைகளால் தங்கள் முகங்களை மூடிக் கொண்டனர். ஏன் அவ்விதம் செய்தனர்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! பரிசுத்தமான சேராபீன்கள் தேவனுடைய சமூகத்தில் நிற்க வேண்டுமானால் தங்கள் முகங்களை மூடிக் கொள்ள வேண்டும். அவர்கள் பாவம் அறியாதவர்கள். பாவம் செய்யாதவர்களும் கூட. அவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு வழியும் கூட இல்லாதிருந்தது. இருந்தாலும் தேவ சமூகத்தில் அவர்கள் தங்கள் முகங்களை மூடிக் கொண்டனர். காரியம் இப்படியிருக்க, ஆவிக்குரிய, பாவம் நிறைந்த மனிதர்களாகிய நாம் அவருடைய நோக்கத்திற்காக வைக்கப்பட்ட அவருடைய வார்த்தையுடன் ஏதோ ஒன்றை கூட்டி, தேவன் கூறினபடி செய்கின்ற சிலரின் மேல் நியாயத்தீர்ப்பை செலுத்த முயற்சி செய்கிறோம்; அவரின் வார்த்தைக்கு மரியாதை செலுத்துகிறதில்லை. “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று வார்த்தை கூறுவதை நான் அறிவேன். ஆனால், அதைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு கூறுகிறேன் என்று கூறுகிறோம். அதைக் குறித்து வேறுவிதமாக சிந்தை உனக்கு வரவேண்டாம். ஏனெனில் தேவன் அதை கூறினால் அதுவே போதுமானதாயிருக்கின்றது. 45பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு, “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கின்றது” என்றான் (அப். 2:39). அது என்ன வாக்குத்தத்தம்? பரிசுத்த ஆவியானவர் பொழியப்பட்டதே அந்த வாக்குத்தத்தம். ஜனங்களை எது திகிலடையச் செய்தது. அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் அவர்கள் பேசக் கேட்ட காரியம். அவர்கள் பரிசுத்த ஆவியின் உறவாடுதலினால் குடித்தவர்களைப் போல் தள்ளாடினக் காரியம். ஜனங்கள் அவர்களை பரிகசித்தனர். பேதுரு அவர்களை நோக்கி, “வாக்குத்தத்தமானது உங்களுக்கும் அவர்கள் மனந்திரும்ப விரும்பின் போது. தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று கூறினான். எவ்வளவு பேர்? “தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும்”, இப்பொழுது கவனியுங்கள் உங்கள் சபை உங்களை அழைக்கலாம், உங்களுடைய மனசாட்சி உங்களை அழைக்கலாம். ஆனால் தேவன் உங்களை அழைப்பாரென்றால் தம்முடைய ஊழியக்காரனை எவ்விதம் உடுத்த வேண்டுமென்று தேவன் அறிந்திருக்கிறார். 46பட்டப்படிப்பு படித்து கல்வியறிவு பெற்று, ஸ்தாபனத்தின் செல்வாக்கு பெற்ற பாவமுள்ள மனிதன் அங்கு நின்றுக் கொண்டு சுத்தமான தேவ வார்த்தையுடன் எதையோ ஒன்றை புகுத்த முயற்சிக்கிறான்? ஞாபகம் கொள்ளுங்கள். வார்த்தையானது தேவனாக இருக்கின்றது. பாவம் என்ன என்று அறியாத ஓர் சேராபீன் தேவனுடைய சமூகத்தில் நிற்க தன்னுடைய முகத்தை மூடிக் கொள்ள வேண்டுமானால், பரிசுத்த ஆவியினால் முற்றுமாக நிரூபிக்கப்பட்டு அவருடைய வார்த்தையை பிரசங்கிக்கப்பட்ட பிரசன்னத்தில் நின்று பின்பு கடந்து சென்று, “அது மனோதத்துவம் அல்லது ஏதோ அதுபோன்ற ஒன்று” என்று கூறினோமானால், அந்த நாளில் நாம் எவ்விதம் அங்கு அவருக்கு முன்பு நிற்போம்? தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு விசுவாசியாயிருந்த இந்த மகத்தான மனிதனாகிய ராஜாவிற்கு என்ன நேர்ந்தது. அவன் அங்கு குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டான். அது பாவத்திற்கு அடையாளமாகவும் அசுத்தத்திற்கு அடையாளமாகவும் இருக்கின்றது. அதற்கு சொஸ்தம் கிறிஸ்துவேயன்றி வேறில்லை. அவன் அந்த விதமாகவே மரித்துப் போனான். 47இப்பொழுது கவனியுங்கள். ஜனங்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதில்லை. ஜனங்கள் ஏன் தேவனுக்கு மரியாதை செலுத்துகிறதில்லை? மரியாதை என்பது தேவனுக்கு மட்டுமே உரியதாயிருக்கின்றது. அது இரண்டு தடவை வேதாகமத்தில் பேசப்பட்டுள்ளது. இரண்டு சமயங்களிலும் அது தேவனுக்கே உரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனங்கள் அதை செய்யாததன் காரணம் (சகோ பிரன்ஹாம் 3 முறை பீடத்தை தட்டுகிறார்). அது தேவனென்று அவர்கள் முற்றிலுமாய் உணர்ந்துக் கொள்ளாதது தான். அவர்கள் முற்றிலுமாய் உறுதிப்படவில்லை. உசியாவும் கூட அவ்விதம்தான் இருந்தான். ஒவ்வொரு வார்த்தையையும் தேவன் பாதுகாக்கிறார் என்பதைக் குறித்து அவன் உணராதவனாயிருந்தான். ஏனெனில் தேவன் அவனை ஆசீர்வதித்திருந்த காரணத்தினால். “ஓ, அது என்னை திருப்தியாக்கியிருக்கின்றது. நான் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தை பெற்றிருப்பேனென்றால், நான் விரும்பின எதையும் செய்யலாம்” என்ற விதமாக உசியா நினைத்திருந்தான். நீங்கள் அதை செய்யக் கூடாது. வாலிபராகிய நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் எவ்விதம் தான் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு அருமையான பெண்ணாயிருந்தாலும், பையனாயிருந்தாலும், உங்களுடைய பள்ளி உங்களை எவ்வளவு தான் புகழ்ந்திருந்தாலும் இவையெல்லாம் அருமையாகத்தான் இருக்கின்றது. அதற்கு விரோதமானது இல்லை. ஆனால் தேவனு டைய வார்த்தையோடு காரியத்தை கலந்து தப்பிப் போய்விடலாம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஊழியக்காரர்களாகிய நீங்கள் அவ்விதம் செய்து தப்பிச் சென்றுவிடலாம் என்று நினைத்துவிட வேண்டாம். நம்மில் ஒருவரும் அவ்விதம் செய்ய முடியாது. நீங்கள் ஒருவேளை வீட்டு பெண்மணியாயிருக்கலாம், அல்லது வியாபாரியாயிருக்கலாம். ஆனால் நாம் எல்லாரும் தேவ வார்த்தையினால் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்கிறவர்களாயிருக்கிறோம். ஏசாயா இதை பிடித்துக் கொண்டான். அவர்கள் அவரின் பிரசன்னத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருக்கவில்லை. 48“கர்த்தரை எனக்கு முன்பாக எப்பொழுதும் வைத்திருக்கிறேன்” என்று தாவீது கூறினது இன்று நமக்கு எவ்விதக் காரியத்தை உணர்த்த வேண்டும். தேவனுடைய கற்பனைகளை வாசல் நிலைக்கால்களிலும், படுக்கையின் நிலைக்கால்களின் மேலும், எல்லா இடங்களிலும் கட்டி வைத்திருந்தான். மேலும் தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்து விடாதபடி தன் இருதயத்திலே அதை வைத்து வைத்தான். தனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த வார்த்தையில் எப்பொழுதும் தரித்திருந்தான். அதன் காரணமாகத்தான் அவன், “நான் அசைக்கப்படுவதில்லை” என்று கூறினான். அவன் அக்காரியத்தை செய்த போதிலும் அவைகளை வார்த்தையின் முன்பு செய்தான். இத்தகைய தேவ ஒழுங்கைத்தான் நாமும் எப்பொழுதும் செய்ய வேண்டும். 49சேராபீன்கள், தங்கள் முகத்தை மூடி, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கூப்பிட்டார்கள். ஏனென்றால் அவர் பரிசுத்தராயிருந்தார். இப்பொழுது நாம் இரண்டாவது காரியத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள், முடிகளான இரண்டு செட்டைகளினால் தங்களை கால்களை மூடியிருந்தனர். அதன் பொருள் என்ன? அவருடைய சமூகத்தில் அவர்களின் தாழ்மையை அது குறிக்கிறதாயிருந்தது. ஒரு நல்ல ஸ்தானத்தில் உள்ள மனுஷனுக்கு அது ஓர் கடினமாக காரியமாகும். ஓர் அழகாயிருக்கும், வாலிப பெண்ணிற்கு அது ஓர் கடினமான காரியமாகும். தன் பள்ளியில் கூடை பந்து விளையாட்டில் புகழ் வாய்ந்தவனாக இருக்கும் ஓர் வாலிப பையனுக்கு அது ஓர் கடினமாக காரியமாகும். ஓ, வாலிபனாகிய நீ உன்னை தாழ்த்துவாயானால் தேவன் உன்னை உபயோகிக்கக் கூடும். இளம் பெண்ணே, தேவன் உனக்கு தந்திருக்கிறதான ராணிக்குரிய அழகான தன்மையாகிய பெண்மை என்னும் வல்லமையை, அந்த செல்வாக்கை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கென்று ஏன் உபயோகிக்கக் கூடாது. அவ்விதமாக உபயோகப்படுத்து. அப்பொழுது சரியான பாதையில் வந்துவிடுவாய். தேவனுடைய முறைமைகளின்படி நடப்பதேயன்றி மற்றவைகள் தவறானதாகும். தேவன் உன்னை சிருஷ்டித்திருக்கிறார், உன்னுடைய இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. நீ சிருஷ்டிக்கப்பட்ட விதமாகத்தான் இருக்க வேண்டும். 50இந்த சேராபீன்கள் அவருடைய சமூகத்தில் தங்களை தாழ்த்தியிருந்தார்கள். மோசேயைப் போன்று, மோசே மகத்தான ஓர் புத்திசாதுரியவானாக இருந்த போது எகிப்தியர்களுக்கு எகிப்தின் மகத்தான ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் கற்று தரக் கூடியவனாகயிருந்தான். நம்முடைய விஞ்ஞானமானது இன்னுமாக எகிப்தியர்களின் விஞ்ஞானத்தை மிஞ்ச முடியவில்லை. இன்றைக்கு நம்மால் பிரமீடுகளை கட்ட இயலவில்லை. பூமியின் நடுபாகத்தில் அமைந்து சூரியனின் கீழ் அது இருந்தும் அதன் நிழல் சுற்றிலும் விழாதவாறு இருக்கும். அது போன்ற ஓர் காரியத்தை நம்மால் இன்றும் செய்ய இயலவில்லை. எகிப்திய விக்கிரக சிலைகளை போன்றதோர் சிலைகளை நம்மால் உருவாக்க முடியவில்லை. ஒரு பிரேதத்தை அவர்கள் சுகர்ந்த வர்க்கமிட்டு (Mummy) அனேக ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் அந்த பிரேதம் அன்று இருந்தது போன்று இருக்கும் ஓர் காரியத்தை நம்மால் செய்ய இயலவில்லை. ஒரு பிரேதத்தை சில மணி நேரங்கள் மட்டுமே நம்மால் காத்து வைக்க முடிகிறது. ஆனால் அவர்கள் ஒருவிதமான தைலத்தை உபயோகித்தனர். அக்காரியத்தைக் குறித்து இன்றுமாக நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்களின் சாயங்கள் (colour) சித்திரங்களின் மேல் தீட்டப்பட்ட வர்ணங்கள் தன் நிறத்தை இன்று வரை இழக்கவில்லை அத்தகைய விஞ்ஞானம் நம்மிடத்தில் இன்றும் இல்லை. 51கல்லூரி பட்டிணத்தில் வசிக்கும் வாலிபப் பிள்ளைகளே இங்கு கவனியுங்கள். நானும் கூட ஓர் கல்லூரிப் பட்டிணத்தில் வசிக்கின்றேன். விஞ்ஞானமானது. தேவனுடைய வார்த்தைக்கு வெளியே போகாதவரை அது நன்மையானது தான். ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன். விஞ்ஞானம் உங்களுக்கு ஜீவனைத் தர முடியாது... இன்னொரு காரியம். இந்த விஞ்ஞானமானது தாங்கள் சரியென்று நிரூபித்த காரியத்தினின்று எப்பொழுதும் திருத்திக் கொள்ளாததாயிருக்கின்றது. ஒரு சமயம் ஒரு விஞ்ஞானி, பூமியினின்று தோண்டியெடுத்த எலும்புகள் பலநூறு கோடி ஆண்டுகள் பழைமையானது என்று நிரூபனம் செய்து கூறினார். ஆனால் அந்த எலும்புகள் உப்புத் தண்ணீரில் இருந்தது எனவும், க்ளோரைட் மற்றும் ரசாயன சேர்க்கையினால் அவ்வெலும்புகள் அரிக்கப்பட்டு பல நூறு கோடி வருடங்கள் பழமையானது போல் தோற்றமளிக்கிறது என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் அதைக் குறித்து அவர்கள் திரும்பவும் விமர்சிப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? இல்லை ஐயா, அவர்கள் ஏற்கனவே கூறிய காரியத்தை ஒருபோதும் திருத்திக் கொள்ள மாட்டார்கள். வாலிப சகோதரனே, சகோதரியே, இங்கே வேதத்தில் தேவன் தாம் ஏற்கனவே கூறிய காரியத்தை திருத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவர் எதை கூறினாரோ அதுவே சத்தியமாயிருக்கின்றது. அதுவே எப்பொழுதும் உண்மையாயிருகின்றது. தேவன் ஒரு காரியத்தை கூறும்போது அது அவ்விதமாகவே இருக்கின்றது. 52ஒரு சமயம் நான் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு வெளியே வந்த போது, ஒரு நபர் என்னை சந்தித்து, என்னைப் பார்த்து, “மனிதனே, உலகம் உண்டாகி 6000 வருடங்கள் தான் ஆகின்றன என்று கூறுகின்றீர். நீர் ஒரு தவறான மரத்தின் மேல் அமர்ந்து குரைத்துக் கொண்டிருக்கிறீர்” என்றான். அதற்கு நான், “இந்த உலகத்தின் ஒழுங்கு 6000 வருடமாக இருக்கிறது என்று நான் கூறினது சரிதான் என்றேன்”. அதற்கு அவன், “இங்கே கவனியும், தேவன் வானத்தையும் புமியையும் 6 நாளில் சிருஷ்டித்தார் என்று வேதம் கூறியிருக்கிறது” என்றான். அதற்கு நான், “அவர் அவ்விதம் செய்யவில்லை” என்றேன். “ஆதியாகமம் 1:1-ல், ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்றேன். அது ஒரு காலமாயிருக்கின்றது (period) அதை சிருஷ்டிக்க அவருக்கு எவ்வளவு காலம் பிடித்தது என்பது எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது. அதுதான் அந்த வசனத்திற்கு முடிவாயிருக்கின்றது.(ஆதியாகமம் 1:2-ம் வசனம் ஆங்கிலத்தில் “AND” என்று துவங்குகிறது. இதையே சகோ. பிரன்ஹாம் பின்வருமாறு விளக்குகிறார் - தமிழாக்கியோன்) அவர் உலகத்தை (அதாவது பூமியையும், வானத்தையும்) உபயோகிக்க ஆரம்பித்த போது, “பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். (ஆங்கில வேதாகமத்தில் ”Spirit of God moved upon the water தமிழில் அசைவாடிக் கொண்டிருந்தார் என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் “அசைவாடினார்” என்ற விதமாயிருக்கின்றது - தமிழாக்கியோன்). ஆதி 1:1-ல், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று கூறினார். அது முற்றுபெற்றக் காரியம். அதைக் குறித்து எந்தவிதமான விவாதமும் இல்லை. அதை நான் அவ்வாறே விசுவாசிக்கிறேன். அது எவ்வாறு என்று அறிந்துக் கொள்வது என் தொழில் அல்ல. அவர் அதை சிருஷ்டித்து, அதிலே சற்று காலம் நான் வாழ்ந்திருக்க வேண்டுமென்று வைத்திருப்பதினால் அதை குறித்து மகிழ்ச்சியுறுகிறேன். அவ்வளவுதான். அவர் புதிய உலகமாகிய நீதி வாசமாயிருக்கும் உலகம் ஒன்றைக் கொண்டிருக்கிறார். இயேசுவின் இரத்தமாகிய நீதியின் மேல் என் நம்பிக்கை கூட்டப்பட்டிருக்கிறது. கொள்கையோ, ஸ்தாபனமோ, ஓர் மனித உதாரணமோ ஒன்று இல்லை; கிறிஸ்து அவர் மட்டுமே நான் விரும்புவதாகும். அது ஒன்றே நமக்கு தேவையானதாகும். 53தாழ்மை, புத்தி சாதுரியவானாகிய மோசே எரிந்து கொண்டிருந்த அக்கினி புதரின் பிரசன்னத்திற்கு முன்பு தன் பாதரட்சைகளைக் கழற்றி போட்டுவிட்டான். அவன் பரிசுத்த பிரசன்னத்திலே தன்னை தாழ்த்தினான்! கால்களை மூடுவது என்றால் அது தாழ்மையை குறிக்கின்றதாயிருக்கின்றது. பவுலை கவனியுங்கள், அவனுடைய நாட்களில் மகத்தான உபாத்தியனான கமாலியேலின் பாதத்தில் கல்வி பயின்ற புத்தி சாதுரியவானாக இவன் இருந்தான். கல்லூரி ஞானம் பெற்று தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தான். “இந்த கூட்ட ஜனங்கள் பயித்தியக்காரர் தவிர வேறல்ல” என்று நினைத்து தமஸ்குவின் ஊடாக சென்று அவர்களை காவலில் அடைக்க அதிகாரத்தை ஆசாரியனிடமிருந்து பெற்றான். ஒரு நாளில் அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, அக்கினி ஸ்தம்பத்தில், எரிகிற அக்கினி புதரில் மோசேயுடன் பேசின அதே தேவனுடைய சமூகத்திற்கு வந்தான். சவுல் என்னப்பட்ட பவுல் என்ன செய்தான்? அவன் முகங்குப்புற விழுந்து தாழ்மைப்பட்டு போனான். 54யோவான் ஸ்நானகன் என்ன செய்தான்? “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களிலே யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவருமில்லை” (லூக்கா. 7:28) என்று இயேசு கூறினார். இந்த மகத்தான தீர்க்கதரிசி உலக தோற்றத்திற்கு முன்பு தேவனால் அபிஷேகிக்கப்பட்டு இவன் தோன்றுவதற்கு 712 வருடங்களுக்கு முன்பாக ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினால் முன்னறிவிக்கப்பட்டவனாயிருந்தான். இயேசு ஜனங்களின் மத்தியிலிருந்து வந்து அக்கினி வானத்திலிருந்து புறாவின் ரூபமாய் வந்து அவர் மேல் தங்குவதை யோவான் பார்த்த போது, “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா” என்று கூக்குரலிட்டான். “அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” என்று யோவான் கூறினான். இரண்டு பேரை ஒரே சமயத்தில் பூமியின் மேல் தேவன் கொண்டிருக்க முடியாது. ஒருவன் மட்டுமே செய்தியை உடையவனாக இருக்க முடியும். நான் சிறுக வேண்டும்: இந்த நாட்கள் வரை நான் இருந்தேன் இனி அவர் என் இடத்தில் இருக்க வேண்டும் அவர்தான் இனிமேல் தூதனாயிருக்கிறார் என்றான். எலிசாவைப் போன்று, எலியா மேலே சென்ற போது தன்னுடைய சால்வையை எலிசாவினிடம் எறிந்தான்; எலியாவின் ஊழியம் அங்கு முடிந்தது. அவன் எங்கு விட்டானோ அந்த இடத்தினின்று எலிசா கட்டாயமாக துவங்க வேண்டியவனாயிருந்தான். “அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” என்று யோவான் ஸ்நானகன் கூறினான். 55உங்கள் ஒன்றுமில்லாமையைக் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் ஒன்றுமில்லை. அதன் பேரில் சற்று பேச நான் எவ்வளவாய் ஆவலுள்ளவனாக இருக்கிறேன்! நீங்கள் ஒன்றுமில்லை. ஒருவேளை கடினமாக இருக்கலாம். எந்த ஓர் ஊழியக்காரனும் பரியாச பேச்சுகளை (Jokes) உதிர்க்கத் தக்கதான இடம் பிரசங்க பீடமல்ல என்று நான் கருதுகிறேன். அது அவ்விதமாக ஓர் இடமாக ஹாலிவுட்டின் பகட்டானதாக தற்போது மாறிவிட்டது. அதுதான் காரியம். தொலைகாட்சியின் (Television) மூலமாக ஹாலிவுட் பிரசங்க பீடத்தை கைப்பற்றிவிட்டது. அனேக காலங்களுக்கு முன்பு நமது பெண்கள் ஹாலிவுட்டின் பெண் தேவதைக்கு முன்பு அவளுடைய நாகரீகத்திற்கு பணிந்துவிட்டார்கள். பின்பு பிரசங்க பீடம், சாதுரியமான மனிதர்கள், பாடகர்கள் மூலம் ஹாலிவுட்டிடம் சென்றுவிட்டது. ஓ, இந்த பிசாசு எவ்வளவு தந்திரமுள்ளவனாயிருக்கிறான்; பாருங்கள். எண்ணெய்யையும், தண்ணீரையும் நீங்கள் ஒன்றாக கலக்க முடியாது. அது கலவாது. மற்றவர்களுக்கு ஜனங்கள் கொடுக்கக் கூடியதான கவர்ச்சியை பாருங்கள். நீங்கள் எதை செய்தீர்களோ அதுவே ஓர் செல்வாக்காயிருக்கின்றது. 56நீங்கள் எவ்வளவு மகத்தானவர்கள் என்று அறிய வேண்டுமானால், உங்கள் விரலை ஒரு குட்டைத் தண்ணீரிலோ அல்லது ஒரு வாளி தண்ணீரிலோ விட்டு பின்பு உங்கள் விரலை எடுத்து விட்டு, எங்கே எந்த இடத்தில் உங்கள் விரலை விட்டீர்களென்று கண்டு பிடியுங்கள். நீங்கள் ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறீர்கள். நீங்களன்றி நானின்றி தேவனால் கிரியை செய்ய முடியாது. ஆனால் அவரன்றி நாம் கிரியை முடியாது. நாம் அவரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவரே அவர் மட்டுமே ஜீவனாயிருக்கின்றார். அவருடைய புஸ்தகத்தையோ, இதையோ, அதையோ, ஓர் கொள்கையையோ அறிந்து கொள்வது அல்ல. ஆனால் அவரை அறிந்துக் கொள்வதே நித்திய ஜீவனாயிருக்கின்றது. கிறிஸ்து என்னும் நபராக உன்னில் அவர் வார்த்தை மாமிசமாவதை அறிவதே அவரை அறிந்து கொள்ளுவதாகும். அவரும் நீங்களும், நீங்களும் அவரும் ஒன்றாக மாறுவதே காரியம். கடந்த இரவு நான், “உன்னத அடையாளம்” என்ற செய்தியில் கூறினது போன்று. அவர் உங்களுக்குள் வர வேண்டும். உங்களுக்குள்! தேவனும் மனிதனும் கட்டாயமாக ஒன்றாக வேண்டும். உங்களுடைய ஒன்றுமில்லாமையைக் குறித்து சிந்திக்க வேண்டும். 57இப்பொழுது முடிக்கு முன்பு மூன்றாவதான இரண்டு செட்டைகளைக் குறித்து நாம் பார்க்கலாம். சேராபீன்கள், இந்த இரண்டு செட்டைகளைக் கொண்டு பறக்க முடிந்ததை கவனியுங்கள்! முகம் தேவ பரிசுத்தத்தினாலும் அவருக்கு செலுத்தும் கவனத்தினாலும் மூடப்பட்டு, கால்கள் தாழ்மையினால் மூடப்பட்டு இரண்டு செட்டைகளினால் அவைகள் கிரியை செய்ய முடிந்தது. ஒரு ஆயத்தமான ஊழியக்காரன் என்ன செய்ய வேண்டுமென்பதை தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு காட்டுகிறார். “உசியாவை பார்ப்பதை விட்டுவிடு” இதோ என்னுடைய உதாரணத்தை உனக்கு முன்பாக அனுப்புகிறேன். கனத்தை செலுத்த உன் முகத்தை மூடு; தாழ்மைக்கு அடையாளமாக உன் கால்களை மூடி கிரியைச் செய்ய புறப்படு!“ ஓ! என்னே ஓர் உதாரணம், அவன் இதுவரை உசியாவை பார்த்திருந்தான். அக்காரியம் தவறாக போய்விட்டது. ஆயத்தமான தம்முடைய தீர்க்கதரிசிக்கு என்ன செய்ய வேண்டுமென்பதை தேவன் கூறிக் கொண்டிருந்தார். அவன் கிரியை செய்ய புறப்பட்டு போனான். 58கிணற்றடியிலிருந்த ஸ்திரீயைப் போன்று, இயேசு, அவள் ஐந்து புருஷரை வைத்திருந்தாள் என்று கூறின போது அவள் கிரியைச் செய்ய புறப்பட்டு போனாள். அவ்விதமானதொரு காரியம் சம்பவிக்க அந்த ஸ்திரீயானவள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் 400 வருடங்களாக அங்கு தீர்க்கதரிசி யாரும் இல்லை. ஒரு நாள் காலை அவள் தண்ணீர் எடுப்பதற்காக புறப்பட்டுச் சென்றபோது எதிர்பாராத விதமாக உண்மையான ஒன்றை அவள் சந்தித்துவிட்டாள். எங்காவது, ஏதோ ஓர் சமயத்தில் தேவன் அவரை எதிர்பாராத விதமான நமக்கு முன்பாக வைப்பார். இக்காலை நேரத்திலும் தேவன் அதை செய்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவள் எதிர்பாராத நேரத்தில் அவர் அவளுக்கு அதை செய்தார். அவர் அவளைப் பார்த்து, “தாகத்துக்கு தா” என்றார் (யோ. 4:8). அவருக்கு மொண்டுக் கொள்ள பாத்திரமில்லை என்றெல்லாம் அவள் தண்ணீரைக் குறித்து அவரிடம் வாதிட்டாள். அவள் மொண்டு கொள்ள வராதிருக்கும் அளவு அவரிடம் தண்ணீர் இருக்கிறது என்பதை அவள் அறிந்துக் கொள்ள அனுமதித்தார். அங்கே அவர்கள் மத சம்பந்தமான உரிமைகள் எது என்றும் எங்கேயென்றும் விவாதித்து, “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டு வந்தார்கள். நீங்கள் எருசலேமில் இருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்று கூறினாள்”. 59அவர் என்னவாயிருந்தார்? அவரே வார்த்தையாயிருந்தார். “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவா. 1:1) மேலும் எபிரேயருக்கு எழுதின நிரூபம் 4-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில், “தேவனுடைய வார்த்தையானது, ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், உருவக் குத்துகிறதாயிருக்கிறது. குழந்தையை தட்டிக் கொடுப்பது போன்ற விதமாயில்லை. அது வெட்டுகிறது. முன்னும் பின்னும் சென்று குத்துகிறது. ”ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயுமிருக்கிறது. ஏனெனில் அவரே மாறாதவார்த்தையாயிருக்கிறார். அவர் இன்றும் மாறாதவராயிருக்கிறார். கவனியுங்கள், இந்த மாறாத வார்த்தையினால், அவர் அந்த பெண்ணின் முகத்திற்கு நேராக பார்த்தார். 60இதோ அவள் நின்றுக் கொண்டிருக்கிறாள். நாம் இன்று அழைக்கின்றபடி அவள் ஒரு அவமானம் நிறைந்தவளாக ஓர் தெரு விபச்சாரியாகவோ அல்லது வேறு எவ்விதமாகவோ இருந்திருக்கக் கூடும். ஒருவேளை பெற்றோர்களால் துரத்திவிடப்பட்ட ஓர் பிள்ளையைப் போல் அவள் இருந்திருக்கக் கூடும். அவ்விதம் இருப்போர் இன்று அநேகர். ஆனால் இந்த பெண் ஒருவேளை 18 வயது மதிக்கத் தக்கதான வாலிபமான அழகுமிக்க பெண்ணாயிருந்து உயர் கல்விப் படிப்பினின்று வெளி வந்தவளாயிருக்கக் கூடும். அவள் தவறான பாதையை தெரிந்துக் கொண்டு அவளுடைய குணாதிசயங்கள் சீர்குலைந்து காணப்பட்டது. அவள் சார்ந்து கொள்ளக் கூடிய காரியம் ஏதுமில்லாதிருந்தது. அங்கே அவள் தண்ணீர் எடுக்கச் சென்று ஓர் மனிதனை சந்தித்தாள். அவர் அவளிடம் பேசினார். அவள் அவரிடம், “இங்கே ஓர் பிரிவு உண்டாகியிருக்கிறது, நீர் என்னோடு பேசக் கூடாதே, நீர் ஓர் எபிரேயன், நானோ சமாரியாவை சேர்ந்தவராயிருக்கின்றேனே. சரி என்னை யார் என்று பார்த்துக் கொள்ளும். என்னிடம் ஏன் பேசுகிறீர்? உமக்கு என்ன வேண்டும்? கவனியுங்கள் அவள் நோக்கம் தவறாயிருந்தது. 61ஒருவேளை அந்த பெண் தன்னுடைய தண்ணீர் பாத்திரத்தை தூக்கி எறிந்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கக் கூடும். இன்று அநேக சமயங்களில், ஜனங்கள் காரியத்தை அறிந்துக் கொள்ளும் முன்பு கூட்டத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர். அவளைப் பற்றிய காரியம் அவ்விதமாயிருக்கவில்லை. இந்த முன் குறிக்கப்பட்ட காரியம் வித்தியாசமாக இருந்தது. அவள் இடைப்பட்ட இந்த மனிதனில் ஏதோ ஓர் விரும்பத்தக்க காரியம் இருந்தபடியால் அவள் அவரோடு பேசினாள். அங்கு என்ன நடந்தது? அவள் செய்த காரியங்களையெல்லாம் அவர் கூறினார். அவர் அவ்விதமாக கூறினபோது, அவள், “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன், நீர் என்னை முன் பின் அறிந்திருக்கவில்லையே” என்றாள். அவரை தீர்க்கதரிசி என்று அவள் எவ்வாறு அறிந்தாள்? ஏனெனில் வார்த்தை அவரிடம் வந்த காரணத்தினால். “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி அவன் சொல்வது உண்மையானால் அவனுக்கு செவிக் கொடுங்கள் ஏனெனில் அவனே என் பிரதிநிதி, அவனே என் வார்த்தை மாம்சமானவன்” என்று வேதம் கூறுகின்றது. 62அந்த கிணற்றடி பெண்மணி, “ஐயா, கடந்த ஆண்டுகளாக எங்களுக்கு தீர்க்கதரிசி இருந்ததில்லை. நீர் ஒரு தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியாவைத் தவிர வேறு தீர்க்கதரிசி வருவார் என்று கூறுகிற எந்த வசனமும் எங்களுக்கு இல்லை. மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். இத்தகைய அடையாளங்கள் அவர் வரும்போது நடக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றாள். மகத்தான போதுமானவராகிய இயேசு அப்பொழுது அவளைப் பார்த்து, “நானே அவர் என்றார்” ஆமென். என்ன? என்று குதித்தெழுந்து ஓடி, “நான் இதற்கு செவி கொடுக்கப் போவதில்லை” என்று கூறாமல், அவள் தன் முகத்தை மூடி, “நான் தவறானவள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்' என்றாள். மேலும், ”ஆண்டவரே நான் இங்கே மொண்டுக் கொள்ள வராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தர வேண்டும் என்றாள்“. (யோவா. 4:15) தேவன் தம் ஜனங்களை எவ்விதம் உடுத்துவிக்கிறார் என்பதை பாருங்கள். 63இப்பொழுது காரியம் என்ன? அவள் ஆயத்தமானாள். அவர் மேசியா என்று அவளுக்கு வெளிப்பட்டது. அவள் உடனே கிரியை செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவளை நிறுத்த முடியுமா? நீங்கள் அதைச் செய்ய முடியாது. அவள் ஊருக்குள்ளேச் சென்று ஜனங்களைச் நோக்கி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். நாம் ஒரு மேசியாவிற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோமே, இதோ அவர் என்றாள். ”நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களாயினார்கள்“ என்று வேதம் கூறுகிறது. (யோவா. 4:39) அவள் கிரியையில் கொண்டு வரும் அளவிற்கு உண்மையானதொன்றை அவள் பெற்றுக் கொண்டாள். மேசியா என்ன செய்வார் என்று வேதாகமத்தின் மூலம் அவள் போதிக்கப்பட்ட விதமாக இயேசு கிறிஸ்துவை சந்தித்தப் பின்பு அதன் ரூபகாரத்தை நேரிடையாக கொண்டு வந்து, இவர் தான் மேசியா என்று ஜனங்களுக்கு நிரூபித்தாள். 400 வருடங்களாக இதைப் போலவொத்த காரியம் அவர்களுக்கு சம்பவித்ததில்லை, ”இதோ அந்த மனிதன்“ என்று அவளின் சாட்சி, அவள் ஓர் விபச்சாரியாயிருந்தாலும் அவளின் வார்த்தை நிரூபிக்கிறதாயிருந்தது. 64ஓ, வாலிப பெண்ணே... ஒருவேளை நீ அத்தகைய வாழ்க்கை வாழாமலிருக்கலாம். ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த நபரை நீ சந்திக்க நேர்ந்தால், உன்னுடைய பள்ளியின் சகத் தோழிகளுக்கு உன்னில் இருந்து உண்டாகும் கவர்ச்சி என்னவாயிருக்கும். கல்வி பயிற்று சாதுரியவானாக இருந்த சவுல் என்னும் வாலிபனை கவனியுங்கள். கிறிஸ்தவ உலகத்திற்கு அவன் எவ்வளவாக ஓர் கவர்ச்சிக்குரியவனாயிருந்தான். புறஜாதிகளுக்கென்று அனுப்பப்பட்ட ஓர் அப்போஸ்தலனாயிருந்தான். ஓர் நாளில் அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தை சந்தித்த போது, தன்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்தினின்று வெளிகொணர்ந்த அதே அக்கினி ஸ்தம்பம் தான் அது என்பதை அறிந்தான். இந்த அதே தேவனை நீங்கள் சந்திக்க நேர்ந்தால்! அதுதான் வேதாகமாயிருக்கிறது. அவர் தாம் தேவன் என்று நிரூபணம் உண்டாகி இன்று பூமியின் மேல் அது வெளியாகியிருக்கின்றது. அவருடைய வார்த்தை, “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்றவிதமாக அறியப்பட்டிருக்கின்றது. அதனுடன் நீங்கள் தொடர்பு கொள்வீர்களானால், நீங்கள் எவ்வளவாய் உங்கள் சபைக்கும், சமுதாயத்திற்கும், எல்லாருக்கும் கவர்ச்சிக்குரியவர்களாயிருப்பீர்கள். நீங்கள் முற்றிலும் மாறின ஓர் நபராயிருப்பீர்கள். ஆம், ஆம். ஐயா. 65இந்த பேதுருவை கவனியுங்கள். அவன் பார்த்து உறுதிபட்டபோது நடந்தது என்ன. அவன் இரவெல்லாம் மீன் பிடிக்க முயற்சித்து ஒன்றும் பலனளிக்கவில்லை. அவன் ஒர் மீன் பிடிப்பவனாக இருந்து, சந்திரனின் மாறும் காலம் வரும்போது மீன்களின் போக்கு என்னவென்பதை அறிந்திருந்தான். ஆனாலும் அங்கு சற்று நிமிடங்கள் காத்திருந்து இயேசு சொல்வதை கவனித்துக் கேட்டான். அவன் பொறுமையில்லாதவனாக எழுந்து ஓடிவிடவில்லை. முழுவதுமாக அவர் செய்தியை முடிக்கும்வரை அங்கு நின்று அதைக் கேட்டான், பேதுரு இரவெல்லாம் முயற்சித்தும் ஒரு மீனையும் பிடிக்கவில்லை. இக்காலை நேரத்தில் எத்தனை சீமோன்கள் இங்கே இருக்கிறீர்கள்? எத்தனை சீமோன்கள் இந்த ஒலிநாடாவை கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? சீமோன்களே, மெத்தோடிஸ்டுகளிலிருந்து, பாப்டிஸ்டுகளுக்கும், பெந்தேகோஸ்தேயினருக்கும், ஒருத்துவத்துவக்கும், இரண்டுத்துவத்துக்கும், மூன்றுத்துவத்துக்கும் மாறி மாறி குதித்தும் ஒன்றும் பெற்றுக் கொள்ளாதவர்களாயிருக்கின்றீர்கள். சில நிமிடம் அமர்ந்து ஏன் நீங்கள் செவி சாய்க்கக் கூடாது? உங்கள் நேரத்தில் சில நிமிடங்கள் கிறிஸ்துவுக்கென்று கடன் வாங்குங்கள். 66வார்த்தை இங்கு சீமோனுக்கு வருவதை கவனியுங்கள்: “சீமோனே, ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்கும் படி உங்கள் வலைகளை போடுங்கள்” என்று கட்டளை கொடுத்தார் (லூக்கா: 5:4) அவன் திரளான மீன்களைப் பிடித்தபின்பு, இயேசுவை நோக்கி, “ஆண்டவரே நான் இரவு முழுவதும் முயற்சித்தேன். இது என் அறிவிற்கப்பாற்பட்டதாயிருக்கிறது. இது எவ்வாறு வந்தது என்பதை என்னால் விவரிக்க இயலாது” என்றான். அது எவ்வாறு கிரியை செய்கிறது என்பதை என்னாலும் கூட விவரிக்க இயலாது கருவிகளைக் குறித்து (Mechanics) எனக்கு ஒன்றும் தெரியாது. இயக்கும் சக்தியை (Dynamics) குறித்து தான் நான் அக்கறையுள்ளவனாயிருக்கின்றேன். அதை அவர் எவ்விதம் செய்கிறார் என்பதை குறித்து நான் அறியேன். ஆனால் அவர் அதை செய்கிறார். ஏனெனில் அவர் அதைக் குறித்து வாக்குரைத்திருக்கிறார். அங்கு மீன்கள் இல்லையென்று தெரிந்தும் அவன் தன் வலையை போட்டான். ஏனெனில் அங்கு மீன் உள்ளது என்று தேவன் கூறினதே அதன் காரணமாகும். காரியம் எப்படியிருந்தாலும் அவன் தன் வலையை அங்கு விரித்தான். “ஓ, நான் பீடத்தினிடம் சென்றிருந்தேன், இதை செய்தேன், அதை செய்தேன், இதை முயற்சித்தேன், மேலும் கீழுமாக சென்றேன் என்றெல்லாம் கூறலாம். வலையை போடு என்று தான் அங்கு கட்டளை பிறந்ததாயிருந்தது. அவன் அங்கு மீன்களை பிடித்த பின்பு அவன் செய்த காரியம் என்ன? முதலாவது அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து அவருக்கு மரியாதையையும் கனத்தையும் செலுத்தி, “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப் போக வேண்டும்” என்றான். (லூக்: 5-8) அது என்ன? அது தாழ்மையும் பயபக்தியுமாமே. அவன் அவ்விதம் செய்த பின்பு வார்த்தையானது அவனிடம் எவ்வாறு திரும்பவும் வந்தது. “பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்ற விதமாக வந்தது (லூக்: 5:10). ஓ! அதன் பின்பு அவன் கிரியை செய்து மரித்தான் பாருங்கள். 67சொஸ்தமாக்கப்பட்ட அந்த குருடனால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று விவரிக்க இயலவில்லை. இயேசு பாவியோ இல்லையோ என்பதை அவன் அறியவில்லை. மாறாக, “அவர் என் கண்களை திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாமலிருக்கிறது ஆச்சரியமான காரியம்” என்று அந்த ரபீக்களைப் பார்த்து கூறினான். அவர்கள் அவனை நோக்கி, “உனக்கு யார் சுகம் கொடுத்தது?” என்றார்கள். அவனுடைய பெற்றோர்களையும் அவர்கள் கேட்டார்கள் (யோ. 9:10). அந்த போதகர்கள் ஏற்கனவே ஜனங்களிடம், “யாராகிலும் இயேசுவின் கூட்டங்களுக்கு செல்வீர்களானால் சபையை விட்டு புறம்பாக்கப்படுவீர்கள்” என்று கட்டுப்பாடு பண்ணியிருந்தார்கள் (யோ. 9:22), “அவன் ஓர் பயித்தியம் பிடித்த மனிதன் அவனுடைய கூட்டங்களுக்கு செல்வீர்களானால் புறம்பாக்கப்படுவீர்கள்” என்று கூறியிருந்தார்கள். அவ்விதம் தான் வேதம் கூறுகின்றது. ஆனால் அந்த கருடனோ அந்த கூட்டத்திற்கு சென்றான். அங்கே இயேசு அவனை சொஸ்தமாக்கினார். 68அவனுடைய பெற்றோர் அப்பட்டிணத்தின் மகத்தான சபையின் அங்கத்தினர்களாயிருந்து, தங்கள் மதிப்பை இழந்துவிடுவார்களோ என்று பயந்து அதைக் குறித்து ஏதும் கூற வெட்கமுற்றார்கள். “இவன் வயதுள்ளவனாயிருக்கின்றான். இவனையே கேளுங்கள், இவன் எங்கள் குமாரன் தான் என்றும், குருடனாய் பிறந்தான் என்றும் எங்களுக்கு தெரியும். ஆனால் சொஸ்தமானதை குறித்து எங்களால் எதுவும் கூறும் முடியாது” என்றார்கள் (யோ. 9:20-23). ஓ, வெதுவெதுப்பான, எல்லையோர விசுவாசிகளாயிருந்தார்கள். அவன் பெற்றோர், அவர்கள் அவனை நோக்கி, “உனக்கு யார், சுகம் தந்தது?” என்றார்கள் (யோ.9:19) அதற்கு அவன், “இயேசு என்னப்பட்ட ஒருவர் எனக்கு சுகம் தந்தார்” என்றான். (யோ. 9:11). ஆம், ஐயா அங்கே அவன் தாழ்மையில் அமர்ந்திருந்தான். கிரியையானது அங்கு நடைபெற்றது. அவர்கள் அவனைப் பார்த்து, “இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இவன் எந்த பள்ளியினின்று வந்தான் என்று எங்களுக்குத் தெரியாது. அவன் எந்த ஸ்தாபனத்தையும் சாராதவனாயிருந்து ஐக்கிய சீட்டொன்றும் இல்லாதவனாயிருக்கின்றான். அவன் பாவியாயிருப்பதினால் அவனுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமில்லை” என்றார்கள் (யோ. 9:24). அதற்கு அவன், “நல்லது, பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானது முதல் கேள்விப்பட்டதேயில்லையே! ஒரு மனிதன், ஒரு ஊழியக்காரன் கண்களை திறந்தான் என்பதை இவ்வுலகத்தில் கேள்விப்படவில்லையே! போதகர்களாயிருந்து வார்த்தையை உள்ளும் புறமும் அறிந்தவர்களாயிருந்தும் இவரைக் குறித்து உங்களுக்கு தெரியவில்லையா? அது ஆச்சரியமான காரியம் என்றான் (யோ.9:30.32). 69அவர் வரும்போது, “குருடனின் கண்கள் திறக்கப்பட்டு, முடவன் மானைப்போல் குதித்தான்” என்று (ஏசா.35:5.6) வேதம் கூறியிருப்பதை அவர்கள் கவனித்து வார்த்தை மாமிசமாவதை கண்டிருந்திருக்க வேண்டும் பாருங்கள். ஆனால் அந்த வாலிபனோ அதை அறிந்திருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் அங்கு கிரியையில் இறங்கினான். அவன் தன் எஜமானுக்கு முன்பும், போதர்களுக்கு முன்பும், சங்கத்திற்கு முன்பும் நிற்க அவன் ஆயத்தமாயிருந்தான். ஏனெனில் அவன் தேவனை அறிந்துக் கொண்டான். அவன் தன்னை தாழ்த்தி தன்னுடைய சாட்சியோடு கிரியை செய்யப் போனான். அவன் தான் உண்மையான ஊழியக்காரன் பாருங்கள். இந்த கடைசி நாளில், இந்த மணிநேரத்திற்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தைகள் நிரூபணமாகிறதை நாம் பார்க்கும்போது, அக்கினி ஸ்தம்பமானது நம்மை கிரியையில் இறங்க பண்ணியிருக்க வேண்டும். முழு தேவ அசைவையும் கிரியையில் அது கொணர்ந்திருக்க வேண்டும். இன்றைக்குரிய பிரச்சனையென்னவெனில், “சற்று பொறுங்கள், அந்த கிரியை நம்முடைய கூட்டத்தினின்று வரவில்லை. அது இயேசுவின் நாமமாயிருக்கின்றது. அந்த காரியத்தை நடத்துபவன் ஒரு நாடோடி, அவன் முன்பு பாப்திஸ்து சபையினின்று ஓடி வந்தவன்... ஆ, ஆ...” என்று நம்முடைய ஸ்தாபனங்கள் கூறுகின்றது. அதை அவர்களால் காணமுடியவில்லை பாருங்கள்? அதுதான் உண்மை. 70அவருடைய வருகையின் அடையாளம் துரிதமாயிருக்கின்றது. இதை தவிர வேறு ஒன்றும் இனி இப்பூமியில் சம்பவிப்பதில்லை... “நடு இரவிற்கு இன்னும் மூன்று நிமிடங்கள் உண்டு” என்று பல வருடங்களுக்கு முன்பே விஞ்ஞானமானது நமக்கு கூறியது. அப்படியானால் இன்று நாம் நடு இரவு வருவதற்கு ஒரு இமைபொழுது மட்டுமேயுண்டு என்று அறிகிறோம். ஜாடியை எந்த நேரம் வெடி பொருள் கொளுத்தப் போகிறது என்பதை நாம் அறியோம். வரவிருக்கும் தேர்தலை கவனியுங்கள். ஒரு சிறு பொறி போதும் காரியத்தை கொளுத்த. ரடார் (Radar Screen) திரை, அணுகுண்டு வரும் குறிப்பை வெளியிடும் போது ஒவ்வொருவரும் கட்டவிழ்த்துவிடப்படுவர். ஆனால் சபையோ அச்சமயத்தில் சென்றுவிட்டிருக்கும். அது எந்த நிமிடத்திலும் நடக்கக் கூடும். ஆனால் சபையானது அக்காரியம் நடைபெறுவதற்கு முன்பு சென்று விட வேண்டும். கடைசி நாட்களில் அவருடைய ஊழியமானது என்னவிதமாக நடக்கும் என்று முன் அறிவிக்கப்பட்ட அதே காரியமானது. இரவுக்கு இரவு, ஒவ்வொரு நாளும் நமது கண்களுக்கு முன்பாக நடைபெறுவதை நாம் காண்கிறோம். அவைகள் காலம் சமீபமாயிருக்கிறதென்பதை நமக்கு அறிவிக்கிறது. ஓ, நாம் நம்மை தாழ்மைப்படுத்தி கிரியைக்குள்ளாக்க வேண்டும். அது உண்மை. வார்த்தையின் நிறைவேறுதலானது நம்மை கிரியைக்குள்ளாக்க வேண்டும். தங்களை உயர்த்தின ஜனங்களிலிருந்து வந்த காரியத்தை கண்ட தீர்க்கதரிசி ஏசாயாவைப் போல், நாமும் இன்று காண்கிறோம். ஜனங்கள், “நல்லது, ஏதாகிலும் ஓர் காரியம் நடை பெற வேண்டுமென்றால் அது நம்முடைய ஸ்தாபனத்தினின்று தான் வர வேண்டும். அது திரித்துவத்தினின்றோ, ஒருத்துவத்தினின்றோ, தேவ சபை, மெத்தோடிஸ்டு, பாப்திஸ்டு, பிரிஸ்பிடேரியன் அல்லது கத்தோலிக்கம் என்ற அமைப்புகளின்றோ வருவதாயிருந்தால் பரவாயில்லை என்று கூறுகின்றனர் 71மெக்சிகோ என்னுமிடத்தில் நான் ஒரு சமயம் பேட்டி கொள்ளப்பட்டேன். காலை 9 மணி அளவில் இறந்து போன ஓர் சிறுபிள்ளை அன்றிரவு கூட்டத்தில் ஒரு தரிசனத்தின் மூலம் 11 மணி அளவில் மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் சகோ. ஜாக் மூர் இருந்தார். கொட்டும் மழையில் அப்பெண்மணி தன் கையில் குழந்தையை இவ்வாறு ஏந்திய வண்ணம் நின்றிருந்தாள். அந்த பிள்ளைக்காக ஜெபம் செய்ய சகோ. ஜாக் மூரை அனுப்பியிருந்தேன். சகோ. ஆர்மென்ட் என்பவரின் மேல் சட்டையை தன்மேல் போட்டிருந்தார். பில்லி இவ்விதமாய் கூறினான், ''நான் கொடுத்துவிட்டேன்...'' சகோதரன் எஸ்பினோசா'வின் நண்பர் எனக்கு என்னவென்று தெரியாது... நான் அவரை, ''மன்னா'' என்று அழைத்தேன். ஏனென்றால் அவர் மெதுவாக இருந்தார். அதனால் நான் சொன்னேன். பில்லி அப்பொழுது எல்லா ஜெப அட்டைகளையும் கொடுத்து முடித்திருந்தான். இந்த பெண்மணி தன் கையில் இறந்து போன குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். பில்லி என்னிடம், “அப்பெண்மணி உள்ளே வருவதை தடுக்க போதிய அளவு வழி இல்லை. ஏனெனில் அவளை யாராகிலும் தடுக்க இயலவில்லை” என்று கூறினான். 72அந்த இரவிற்கு முன்னாள் ஒரு குருடன் தன் பார்வையைப் பெற்றிருந்தான். அப்பொழுது நான் சகோ. ஜாக் மூர் அவர்களை பார்த்து, “நான் யாரென்பதை அப்பெண்மணி அறியாமலிருக்கிறபடியால் நீங்கள் அங்கு சென்று அவளுக்காக ஜெபம் செய்யுங்கள் அவளால் வித்தியாசத்தைக் காணமுடியாது” என்று கூறினேன். அவள் அந்த மரித்துப் போன தன் குழந்தையை கையில் ஏந்தியவாறு வாயிற்காப்போரின் கால்களின் அடியில் புகுந்தும், மேல் ஏறியும் குதித்தும் ஓடிக் கொண்டிருந்தாள். 20 வயது மதிக்கத் தக்க ஒரு கவர்ச்சிகரமான பெண்ணியிருந்தாள். ஒருவேளை அப்பிள்ளை அவளின் முதற்குழந்தையாயிருக்கக் கூடும். காரியம் இந்தவிதமாயிருந்தபடியால் நான் சகோ. ஜாக் முரை பார்த்து, “நீங்கள் அங்கு சென்று அவளுக்காக ஜெபம் செய்யுங்கள் என்றேன். நானோ அங்கு மொழிப் பெயர்ப்பாளரின் மூலமாக பேசிக் கொண்டிருந்தேன். மேலும் நான் தான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பவன் என்பதை அவள் அறிந்திருக்க வழியில்லை. 73ஆகவே, சகோ. ஜாக் மூர் அவர்கள் ஜெபிப்பதற்காக புறப்பட்ட சமயத்தில், இந்த சிறு குழந்தை உட்கார்ந்து கொண்டிருப்பதை என முன் தோன்றின ஓர் தரிசனத்தில் பார்த்தேன். பின் நான் “கவலைக் கொள்ள வேண்டாம், குழந்தையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றேன். அக்குழந்தையின் மேல் என் கைகளை வைத்த ஒரு சில க்ஷண நேரத்தில் அது உயிரடைந்தது! ஒரு குருடன் தன் பார்வையைப் பெற்றுக் கொள்ள முடியுமானால், தன் குழந்தையும் உயிர் பெற்றெழ முடியும் என்ற காரியத்தை அவள் பெற்றுக் கொண்ட பின்பு அவள் உடனே கிரியையில் இறங்கி துரிதமாக தன் மருத்துவரிடம் சென்று தன் குழந்தை அன்று காலை நிமோனியா வியாதியினால் இறந்துபோயிற்றென்ற சான்றிதழை கையெழுத்திட்டு பெற்று கொண்டு உடனே கிரியையில் இறங்கினாள். அன்றிரவு 11 மணிக்கு அவள் குழந்தை மீண்டும் உயிர்ப் பெற்றுக் கொண்டது. ஏனெனில் அவளின் விடாமுயற்சியே அதன் காரணமாயிருந்தது. அது எனக்கு மிகவும் பிரியமானதாகும். தேவனே, அத்தகைய ஜனங்களை அதிகமாக எங்களுக்குத் தாரும். அவள் ஒரு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவளாக தன்னுடைய கரங்களில் மணியை உருட்டிக் கொண்டு வந்தாள். நான் அவளைப் பார்த்து, “இனி அது தேவையில்லை” என்றேன். வாலிபனே அதைக் குறித்து கேவலமாக அல்ல, ஆனால் அதற்கு இனி அவசியமில்லை. எந்த ஒரு அமைப்போ, மெத்தோடிஸ்டு ஜெபமோ, பிரிஸ்பிடேரியன் ஜெபமோ, கத்தோலிக்க மணியோ, அல்லது பெந்தேகோஸ்தேயின் கூச்சலோ அல்ல. நாம் விசுவாசிக்கும் தேவன் தான் காரியமாயிருக்கின்றது. அவருடைய வார்த்தையினால் தேவனை நாம் விசுவாசிப்பதே காரியமாயிருக்கின்றது. அவருடைய வார்த்தை தேவனாயிருக்கின்றது. அது ஓர் விதையாயிருப்பதினால், திரும்பவும் உற்பத்தி செய்துதான் ஆக வேண்டும். 74இப்பொழுது, சுயமேன்மைப்படுத்தப்பட்ட ஸ்தாபனங்கள் என்ன செய்தன என்பதை தீர்க்கதரிசி கண்டான். அபிஷேகிக்கப்பட்ட தொழிலின் ஸ்தானத்தை அவர்களால் எடுக்க கூடாமல் போனதை அவன் கண்டான். தங்கள் கொள்கைகள் முதலான காரியங்களினால் அவர்களின் பிடி தளர்ந்தது. கொள்கைகளின் மேலுள்ள அவர்கள் எதிர்பார்க்குதலினால் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு அதுதான் சரியென்று திருப்தியாகிவிடுகின்றனர். உசியாவைப் போன்ற மனிதர்கள் அபிஷேகிக்கப்பட்ட தொழிலின் ஸ்தானத்தை எடுக்க முயற்சித்து தோல்வியுறுகின்றனர். அபிஷேகிக்கப்பட்ட ஸ்தானத்தை எடுக்கவும், போலியாகவும், காரியங்களை செய்யவும் முயற்சிப்பவர்களில் அநேகர் நரம்புதளர்ச்சியுள்ளவர்களும், குடிகாரருமாகவும் மாறிவிடுகின்றார்கள். தேவன் அவர்களை அழைத்து செய்யக் கூறின காரியத்தை பேசி அதில் நிலைத்திராமல் ஓடி மகத்தான ஸ்தாபனங்களை கட்டி ஹாலிவுட்டைப் போன்று பளபளக்கும் காரியங்களோடு ஞானமுள்ள மனிதர்களைக் கொண்டு, “கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது” என்று பிரசங்கிக்கிறார்கள். தன்னுடையதல்லாத ஸ்தானத்தை வகிக்க முயற்சித்த உசியாவைப் போன்று தாங்கள் அபிஷேகிக்கப்படாத இடத்தை மனிதர்கள் எடுக்க முயற்சித்து பின் அவர்கள் பிடியானது தளர்ந்து போகின்றதை நாம் காண்கிறோம். நம்முடைய சபைகள் ஒன்றையொன்று மாற்ற முனைகின்றன. நம்முடைய பெந்தேகொஸ்தே சபைகளில் அதை காண்கிறோம். ஒவ்வொரு ஒருத்துவக்காரரும், திரித்துவக்காரரையும், திருத்துவக்காரர், ஒருத்துவக்காரரையும், தேவ சபை அந்த சபையையும் இவ்வாறு ஒருவரையொருவர் மாற்ற சிரத்தைக் கொள்கின்றனர். அவர்கள் செய்வதற்கென்று அழைக்கப்படாமலிருந்தும் அவ்விதம் செய்ய முயற்சிக்கின்றனர். 75“சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையை காண்பியுங்கள், விசுவாசிக்கிறவர்களை அடையாளங்கள் தொடரும்” என்று தேவன் கூறினார். “ஸ்தாபனங்களையும் பள்ளிக்கூடங்களையும் உண்டாக்குங்கள்” என்று கூறவில்லை. அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை. ஆனால் அவைகள் இதின் ஸ்தானத்தை எடுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் தாங்கள் அக்காரியத்தைச் செய்ய அபிஷேகிக்கப்படாமலிருந்தும் அதை செய்ய முயற்சிக்கும் போது அவர்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதை பாருங்கள். வாலிபர்களில் இக்காரியத்தைக் காண்கிறோம். நாம் எங்கும் அவைகளை காண்கிறோம். ஊழியககாரருக்கு ஓர் உதாரணம் வைக்கப்பட்டிருக்கிறது. மனிதனை கவனிக்காதீர்கள் என்ற காரியமே அது. மாறாக தேவனை கவனியுங்கள். உங்கள் கண்களை மனிதனின் மேலிருந்து விலக்கி தேவனின் மேல் வையுங்கள். ஏதோ, ஓர் கவர்ச்சி பெற்று, “ஓ, தேவனுக்கு மகிமை, கர்த்தர் என்னிடம் பேசுகிறார். இன்னின்ன காரியத்தைச் செய் என்று கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறியும் அது ஒரு போதும் சம்பவிப்பதில்லை. நீங்கள் அறியாத ஓர் காரியத்தை போலியாக செய்ய முயற்சிப்பதுதான். அவ்விதம் செய்யாதீர்கள். அது மிகவும் ஆபத்தானது. நீங்கள் ஆவிக்குரிய குஷ்டரோகத்தினாலும், அவிசுவாசத்தினாலும் பீடிக்கப்படுவீர்கள். உங்கள் ஸ்தாபனங்கள் உங்கள் தொப்பியில் அப்படிப்பட்டதொரு இறகை சொருகி ஒரு மகத்தான ஸ்தானத்தை கொடுக்க முயற்சிப்பார்கள். 76“ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே (ஆங்கிலத்தில் வாயிற்காப்போனாக இருப்பதையே என்ற விதமாயுள்ளது - தமிழாக்கியோன்) தெரிந்து கொள்வேன்” (சங். 84:10) என்று தாவீது கூறின விதமாக இருங்கள் (தீர்க்கதரிசி இவ்வசனத்தை மிதியடியாக இருப்பதை தெரிந்துக் கொள்வேன் என்ற விதமாக பொருள்பட கூறியிருக்கிறார் - தமிழாக்கியோன்). ஆம் ஒரு மிதியடியாயிருங்கள். கர்த்தாவே நீர் என்னை அங்கு அழைத்தாலும் அங்கு நான் ஓர் நல்ல மிதியடியாக இருக்கச் செய்யும். ஜனங்கள் தங்கள் கால்களை துடைத்துக் கொள்ள விரும்பினால் நான் ஓர் சிறந்த மிதியடியாயிருக்க செய்யும். பாதங்கள் சுத்தம் செய்ய அழைக்கப்பட்டிருந்தேனானால் நான் அத்தொழிலையே செய்கிறேன் என்ற விதமாயிருங்கள். இயேசு இப்பூமிக்கு வந்தபோது அதைதான் செய்தார். தேவ குமாரனாகிய அவர் தேவனின் மிதியடியாக மாறினார். கர்த்தருடைய வீட்டிலே இயேசு கால் கழுவும் வேலைக்காரரானார். உன்னை யார் என்று உயர்த்துகிறாய் கண்காணியே (Bishop), மாநில குருவே (State Presbyter), உன்னை யார் என்று உயர்த்துகிறாய்? ஓ!நாம் ஓர் கல்லூரியின் பட்டத்தைப் பெற்ற பின்பு நம்மை யாரோ ஒருவர் என்று எண்ணிக் கொள்கிறோம். நம்முடைய உதாரணமானவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். ஒரு கண்காணியையோ அல்லது மாநில குருவையோ உங்கள் முன் உதாரணமாக பாராதேயுங்கள். அவர்கள் ஒருவேளை நல்லவர்களாக இருக்கலாம். அதைக் குறித்து காரியமல்ல. ஆனால் காரியம் உங்களைப் பற்றியதாகும். நீங்கள் தேவனைப் பாருங்கள். 77பலன்கள் என்னவென்பதையும், பின்பு என்ன நடந்தது என்பதையும் தீர்க்கதரிசி கண்டான். நான் இப்பொழுது முடிக்கிறேன்; ஒரு காரியத்தை உங்களிடம் கூற வேண்டும். அந்த சேராபீனின் கால்களும், கைகளும்... அவனுடைய செட்டைகள் மரியாதையின் அடையாளமாக முகத்தை மூடி, தாழ்மைக்கு அடையாளமாக கால்களை மூடின போது இரண்டு செட்டைகள் அவனை கிரியை செய்ய வைத்தன. அதை குறித்து சற்று எண்ணிப் பாருங்கள், அந்த தரிசனத்தின் பலன்கள் தீர்க்கதரிசியின் மேல் எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்! அது தீர்க்கதரிசியை என்ன செய்தது? மனிதனல்ல, எந்த மனிதனுமல்ல என்ற காரியத்தை அவனுக்கு உணர்த்திற்று... உங்கள் நம்பிக்கையை ஓர் மனிதனின் மேல் வைக்காதீர்கள். அந்த மனிதன் தேவ வார்த்தையை விடும்போது நீங்களும் அந்த மனிதனை விட்டுவிடுங்கள். கவனியுங்கள். அப்படிப்பட்ட மனிதனை விட்டுவிட்டு தேவனில் நிலைத்திருங்கள். தேவனே வார்த்தையாயிருக்கிறார். 78அது என்ன பலனை விளைவித்தது என்று பாருங்கள். ஊழியக்காரரே, இது உங்கள் எல்லோருடைய உள்ளத்தின் ஆழத்திலும் போக வேண்டுமென விரும்புகிறேன். அந்த தீர்க்கதரிசிக்கு என்ன ஆயிற்று? அந்த தரிசனம், உலகத் தோற்றத்திற்கு முன்பு அவனுக்கென்று நியமிக்கப்பட்ட அந்த ஸ்தானத்தில் அவனை அபிஷேகித்தது... “தேவனுடைய கிருபை வரங்களும் அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே” (ரோமர்: 11:29) என்று வேதம் கூறுகின்றது. தீர்க்கதரிசியைப் போன்று அழைக்கப்படாத ஒரு ஊழியக்காரனோ, கண்காணியோ, போதகனோ, சுவிசேஷக்னோ, உங்களைக் குறித்து காரியம் என்ன? அத்தகையதோர் தரிசனம் உங்களுக்கு. எப்படிப்பட்ட பலனையுண்டாக்க வேண்டும்? கர்த்தரின் தரிசனத்தைப் பார்த்தபொழுது அது தீர்க்கதரிசியை தான் ஒரு பாவி என்பதை அறிக்கையிட வைத்தது. அவன் அங்கு நடந்து சென்று, “ஆம், தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அல்லேலூயா! அது எனக்குப் போதும், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இப்பொழுது நான் போகப் போகிறேன்” என்று கூறவில்லை. அல்லது “இதற்கு நான் செவி கொடுக்க மாட்டேன், நான் ஓர் மானசீக காரியத்தால் பீடிக்கப்பட்டேன் என்னுடைய போதகர் கூறுவதைப் போன்று அது இல்லை” என்றும் அவன் கூறவில்லை. மாறாக அதினின்று அவன் ஓர் பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனுக்கு எதை தேவன் காட்ட முயற்சித்தாரோ அதை அவன் கண்டுக்கொண்டான். ஏன்? கிணற்றடியிலிருந்த பெண்ணைப் போலவும் மற்றவர்களைப் போலவும் அவனுக்குள் ஏற்கனவே அந்த ஆவிக்குரிய வித்து இருந்தது. அவர்களெல்லோரும் அதற்கென்று முன்குறிக்கப்பட்டவர்களாயிருந்தனர். காரியம் முரணாக சம்பவித்த தன் காரணத்தை அவன் அறிந்துக் கொண்டான். ஏதோவொன்றை போலியாக்க முயற்சித்த மகத்தான மனிதனாகிய உசியாவை குஷ்டரோக வீட்டில் அவன் கண்டான். தேவன் அங்கு அமர்ந்திருந்ததையும், தம்முடைய ஊழியக்காரர்களை எவ்விதம் உடுத்துவித்து அனுப்புகிறார் என்பதையும் கண்டான். அக்காரியம், அவனை, “நான் ஒரு பாவி என்று கதற வைத்தது”. 'நான் பாவி' என்ற அறிக்கை வந்த பின்பு அங்கு சுத்திகரிப்பதற்கான நேரம் வந்தது. 79ஏசாயா என்னும் இந்த தீர்க்கதரிசி ராஜாவின் அரண்மணையில் ஒரு தீர்க்கதரிசி என்று அறியப்பட்டிருந்தான். நான் கூறுவதை உங்களால் கேட்க முடிகின்றதா? இந்த அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியை அந்த தரிசனமானது, “ஐயோ, அதமானேன, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” என்று கதற வைத்தது (ஏசா. 6:5). (My eyes has seen the order of the Lord என்று கூறுகிறார். அதாவது “கர்த்தருடைய வழிமுறையை என் கண்கள் கண்டதே” என்று பொருள்பட தீர்க்கதரிசி பேசியிருக்கிறார் - தமிழாக்கியோன்). அதன்பின்பு சுத்திகரிப்பு உண்டானது. அங்கே ஓர் சேராபீன் பலிபீடத்திலிருந்து தன் கையில் பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்துக் கொண்டு வந்தான். ஏனெனில் தீர்க்கதரிசி தேவனை நோக்கிப் பார்க்காமல் ஒரு கண்காணியையோ அல்லது பாரோ ஒருவரை தனக்கு உதாரணமாக பார்த்ததை அறிக்கை செய்திருந்ததினால் அங்கே அந்த சேராபீன் அவனுடைய தலையை பின்னிடப் பண்ணினான். வார்த்தையை நோக்கிப் பார்ப்பதற்கு பதிலாக ஒரு கொள்கையை பார்க்கும் போது அது இன்னுமாக உங்களை பின்னடையப் பண்ணி, “அகத்த உதடுகளுள்ள மனிதன்” என்று அறிக்கை செய்யப் பண்ணும். சேராபீன் ஒரு நெருப்புத் தழலோடு வந்து அவனுடைய உதடுகளின் மேல் வைத்து, “இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது” என்றான். (ஏசா. 6:7). 80இந்த வழிமுறையையும் ஒழுங்கையும் கவனியுங்கள். தூதன் ஒரு போதும் கொள்கையின் புத்தகத்தை அவனிடம் கொண்டு வரவில்லை. தேவன் தமது ஊழியக்காரர்களை ஒரு கோட்பாடு என்ற புத்தகத்தின் வாயிலாக ஆயத்தம் செய்வதில்லை மாறாக தம்முடைய ஊழியக்காரரை அக்கினியினால், பலிபீடத்தின் அக்கினியினால் சுத்தம் செய்து ஆயத்தம் செய்கின்றார். அவன் அங்கு, “நான் அதமானேன், ஏனெனில் நான் ஓர் மனுஷனின் மேல் என் நம்பிக்கையை வைத்து, அவனை என் உதாரணமாக்கினதினால் நான் பாவம் செய்தேன், இப்பொழுதோ, நான் தேவ ஒழுங்கை பார்க்கிறேன்” என்று கதறினபோது நெருப்புத் தழலினால் சுத்தமாக்கப்பட்டான். ஒரு மனிதன் தன்னை பாவியென்று உணர்ந்து கொள்ளும் காரியம் மிகவும் அற்புதமில்லையா? அவன் தன்னை பாவியென்று உணர்ந்த பின்பு தேவன் அவ்விதம் அவனோடு இடைபட்டார் என்று பாருங்கள். அவன் தன்னை பாவி என்று அறிக்கை செய்தான். தன்னை தேவன் நெருப்புத் தழலினால் எவ்விதம் சுத்தம் செய்தார் என்பதை கண்டுக் கொண்டான். ஒரு கொள்கையை பிரகடனம் செய்வதின் மூலமோ, ஒரு மணி மாலையை உருட்டுவதின் மூலமோ, சரித்திரக் காரியத்தின் மூலமோ அல்ல. மாறாக, அவர் அவனை ஜீவிக்கிற அக்கினியின் மூலம் சுத்திகரித்தார். 81“வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று வேதம் கூறுகின்றது (அப். 2:39). இதே பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் வந்த இதே பரிசுத்த ஆவியானவரே சுத்திகரிக்கும் வழி முறையானவர். தம்முடைய ஊழியக்காரனை இந்த வழிமுறையேயன்றி வேறெதின் மூலமும் அவர் சுத்திகரிக்க அறிந்ததில்லை. அவன் ஒழுங்கு முறையை பார்த்தான். தேவன் தம்முடைய ஊழியக்காரனை எவ்விதம் ஆயத்தம் செய்து அவன் எவ்விதம் நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவன் பார்த்தான். தம்முடைய ஊழியக்காரனை ஆயத்தம் செய்ய அவரின் வழிமுறை எவ்வாறு இருந்தது என்பதை பார்த்தான். கவனியுங்கள், சுத்திகரிப்பிற்கு பின்பு, கட்டளை பிறந்தது. அவன் அதை செய்த பின்பு அதை தொடர்ந்தது என்ன? கட்டளையாகும். அறிக்கை செய்து சுத்திகரிக்கப்பட்ட பின்பு “யார் நமது காரிமாக போவான்” என்று கர்த்தர் கேட்க, அதற்கு, சுத்திகரிக்கப்பட்ட ஏசாயா, “இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றான் (ஏசா. 6:8). 82வாலிப ஆண்களே, பெண்களே, உங்களுடைய வாழ்க்கை உங்கள் முன்பு உள்ளது. இக்காலை நேரத்தில் நாம் அவருடைய பலிபீடத்தண்டைச் செல்வோம். கர்த்தருடைய வீட்டில் சில நிமிடங்கள் நாம் செல்வோம். வியாபாரிகளே, குடும்பப் பெண்களே, ஊழியர்களே, நாம் இப்பொழுது தேவனுடைய வீட்டிற்குச் செல்வோம், வாருங்கள். எங்கோ தவறுள்ளது பாருங்கள்? இன்றைய கிறிஸ்தவ உலகத்திலே பல அனேக மாமிச பிரகாரமான போலிகள் உண்டாகியிருக்கின்றன. வாலிபரே உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். எவ்வழியாக திரும்புவது என்பதை நீங்கள் அறியாதவர்களாயிருக்கின்றீர்கள். ஒருவன், “இது” என்று கூறுகிறான். மற்றொருவன், “அது” என்று கூறுகிறான். வேறொவன், “மரியாளே வாழ்க” என்றும், இந்த சபையை அல்லது அந்த சபையை சேர்ந்து கொள்“ என்றும் கூறுகின்றான். எல்லாம் தவறாயிருக்கின்றது, அவைகளெல்லாம் மரித்துக் கிடக்கின்றது என்று தேவன் முற்றுமாக காண்பித்து இருக்கின்றார். 83நம்முடைய இருதயமாகிய கர்த்தருடைய பீடத்தினிடம் நாம் இப்பொழுது செல்வோம்; வார்த்தையாகிய இயேசு எவ்விதமிருப்பார் என்பதை நாம் பார்ப்போம். அப்பொழுது, “இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் கர்த்தாவே” என்று நம்மால் கூற முடியும். ஒரு நல்ல வீட்டு பெண்மணியாயிருப்பதற்கு என்னை அனுப்பும் ஆண்டவரே. ஒரு நல்ல பையனாக இருக்க என்னை பள்ளிக்கு அனுப்பும் ஆண்டவரே. பிரசங்க பீடத்திணண்டை ஓர் வித்தியாசப்பட்ட ஊழியக்காரனாக என்னை அனுப்பும் ஆண்டவரே. ஒரு வித்தியாசப்பட்ட வியாபாரியான என்னை என்னுடைய வியாபாரத்திற்கு அனுப்பும் ஆண்டவரே என்று கூறுவோம். இயேசு கிறிஸ்துவை உங்களுடைய உதாரணமாக கொள்ளும் போது அவ்வாறு உங்களால் கூற இயலும். தம்முடைய ஊழியக்காரனை எவ்விதம் ஒருங்கிணைத்தார் என்பதையும், அவனுடைய தாழ்மைக்குப் பின்பு, தேவனுடைய ஒழுங்கை அவன் பார்த்த பின்பு; தீர்க்கதரிசி, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்றான். கட்டளை பிறப்பதற்கு முன்பாக அவன் மரியாதையையும் தாழ்மையையும் உடையவனாக வேண்டும் என்பதை அவன் கண்டபோது, “இதோ அடியேன், என்னை அனுப்பும்” என்றான். 84சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோம். (ஒரு சகோதரன் அன்னிய பாஷையில் பேச, ஒரு சகோதரி அதற்கு வியாக்கியானம் கொடுக்கிறார்) “நெருப்புத்தழல் தீர்க்கதரிசியைத் தொட்ட பொழுது, எவ்வளவு சுத்தமாக வேண்டுமோ அவ்வளவாய் அவனை சுத்தமாகிற்று. அப்பொழுது, தேவ சத்தம், “நமக்காக யார் போவான்?” என்றது. அவன், “எஜமானே, இதோ அடியேன், என்னை அனுப்பும்” என்றான். பேசும், என் கர்த்தாவே, பேசும் என் கர்த்தாவே, பேசும், நான் துரிதமாய் பதிற் கூறுவேன்; பேசும் என் கர்த்தாவே, பேசும் என் கர்த்தாவே, பேசும், நான துரியதமாய் பதிற் கூறுவேன்; கர்த்தாவே என்னை அனுப்பும்.' (சகோ. பிரன்ஹாம் பாடலை முணுமுணுக்கிறார், “பேசும் என் கர்த்தாவே) இப்பாடல் மெதுவாக பாடப்படும் போது, வாலிபரே கவனியுங்கள். ஊழியக்காரரே, வியாபாரிகளே, வீட்டு பெண்மணிகளே சற்று யோசித்துப் பாருங்கள். நாம் இப்பொழுது தேவனுடைய வீட்டில் இருக்கிறோம். உயரே பார்த்து சேராபீன்களை உங்கள் உதாரணமாக்குங்கள். சற்று யோசித்து உணருங்கள். நீங்கள் இப்பொழுது கடைசி காலத்தில் இருக்கின்றீர்கள். ஒருவேளை இன்று காலம் என்பது நித்தியத்தில் மறைந்து போகக் கூடும். அது எப்பொழுது நிகழும் என்று நாம் அறியோம். இதை உணர்ந்து கொள்ளுங்கள். கோடிக்கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் மரித்துக் கொண்டிருக்கின்றனர் (வீதிகளை நோக்கிப் பாருங்கள்) அவர்களின் சோகமான கதறுதலைக் கேளுங்கள்; அவர்களின் உயிர் மீட்சிக்காக ஆயத்தமாகுங்கள்; துரிதமாக பதிலுரைத்திடுங்கள், “எஜமானே, இதோ அடியேன்” என்று. ஓ, பேசும் என் ஆண்டவரே, ஓ, பேசும். . . . . . உங்கள் இருதயத்திலிருந்து அதை கூறுங்கள். ஏசாயா, எங்கு இருக்கின்றாய்? “. . . நான் துரிதமாக பதில் கூறுவேன் பேசும் என் கர்த்தாவே. . . . மெத்தோடிஸ்டுகளே, பாப்திஸ்துகளே, பெந்தேகோஸ்தேயினரே, நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? கர்த்தாவே பேசும், நான் பதில் கூறுவேன், “கர்த்தாவே என்னை அனுப்பும்.” 85நீங்கள் உண்மையிலே அவ்விதம் நோக்கம் கொள்கிறீர்களா? அவர் உங்கள் இருதயத்திலே பேசும்போது, அவ்விதம் நோக்கம் கொள்கிறீர்களா? பேசும் என் கர்த்தாவே; ஓ, பேசும் என் கர்த்தாவே “துரிதமாக பதிற் கூறுவேன்” என்று அவர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது அவர் உங்களோடு பேசுவாரென்றால், உங்கள் கரங்களை உயர்த்தி, “நானா கர்த்தாவே, நானா கர்த்தாவே” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் கர்த்தாவே,பேசும் என் கர்த்தாவே பேசும் நான் பதில் கூறுவேன். . . “நான் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாயிருக்கட்டும் கர்த்தாவே, நீர் என்னை சுத்தகரிக்கும் வரை என்னால் அதை செய்ய இயலாது. இப்பொழுது தூதனை அனுப்பும்”. கர்த்தாவே பேசும் என் கர்த்தாவே, ஓ, பேசும் என் கர்த்தாவே, பேசும் நான் பதிற் கூறுவேன்; பதிற் கூறுவேன்; ஓ பேசும் என் கர்த்தாவே; பேசும் என் கர்த்தாவே, உங்கள் கரங்கள் உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், “கர்த்தாவே, நான் பதிற் கூறுவேன்” என்று கூறுங்கள். அவர் உங்களிடம் பேசுகிறார் என்பதற்கு அது அடையாளம். இப்பொழுது அக்கினி வந்து அவர்களை சுத்தமாக்கட்டும். பேசும் என் கர்த்தாவே; பேசும் என் கர்த்தாவே 86“பேசும், நான் துரிதமாக பதிற்கூறுவேன்” என்ற பாடல் பாடினபோது, கர்த்தராகிய இயேசுவே, பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கைகள், வாலிபர்களின் மத்தியினின்றும், ஊழியக்காரர்களின் மத்தியினின்றும், வியாபாரிகளின் மத்தியினின்றும் உயர்த்தப்பட்டன. நிச்சயமாக, கர்த்தாவே, நீர் இன்னுமாக பேசிக் கொண்டிருக்கிறீர்! நெருப்புத் தழலையுடைய தூதனை இப்பொழுது அனுப்பும். உம்முடைய ஊழியக்காரரை ஆயத்தப்படுத்தும். கர்த்தாவே, ஏனெனில் எங்கள் முன்பாக ஊழியம் வைக்கப்பட்டுள்ளது. ஏசாயா ஒரு தீர்க்கதரிசியாயிருப்பதற்கு அறிந்திருந்தான், ஆனால் அந்நாளின் தேவையை சந்திப்பதற்கு அதற்கு மேலாக அவன் அறிய வேண்டியவனாக இருந்தான். அதை போல கர்த்தாவே, நாங்கள் இன்று பெற்றதைக் காட்டிலும் இன்றுள்ள தேவையை சந்திக்க அதற்கு மேலும் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். எங்களோடு கிறிஸ்து என்னும் நபரை நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். கேள்விகளுக்கு பதிலை இயேசு ஒருவர் மட்டுமே கொடுக்க முடியும். கிறிஸ்து என்னும் நபராக பரிசுத்த ஆவியை தந்தருளும் கர்த்தாவே, அவர் எல்லோருடைய இருதயத்திலும் இப்பொழுது வரட்டும். எங்கள் அவிசுவாசித்தினின்று எங்களை சுத்திகரியும் கர்த்தாவே. எங்களுடைய உலக மூடத்தனத்தினின்றும் கொள்கைகளினின்றும் சுத்திகரியும். நாங்கள் இரவும் பகலும் உம்வார்த்தையை தியானிக்கத் தக்கதாக எங்களை சுத்திகரியும். சுத்திகரிப்புடன் தானே உம்முடைய பதில் எங்களுக்கு வருவதாக கர்த்தாவே அருள்புரியும் கர்த்தாவே. நாங்கள் காத்திருக்கும் இவ்வேளையில் தேவதூதன் எங்கள் ஒவ்வொருவரின் இருதயத்தையும் நெருப்புத் தழலினால் தொடட்டும். அருளிச் செய்யும் கர்த்தாவே. 87தேவ ஆலயத்திலே, பரிசுத்த ஆவியானவரின் வஸ்திரத் தொங்கல் இக்கட்டிடத்தை நிரப்பியிருக்கும் இவ்வேளையிலே உங்கள் தலைகளோடும் கரங்களோடும், இருதயங்களோடும் தேவனிடத்தில் திரும்புவீர்களாக. அவருடைய பிரசன்னம் இங்கு இருக்கின்றது. நாம் இப்பொழுது இதை ஏற்றுக் கொள்வோமாக. இந்த பாடலை திரும்பவுமாக நாம் பாடும் வேளையில், தேவன் உங்களைத் தொடுவதை உணரக் கூடுமானால்... நெருப்புத் தழல் தீர்க்கதரிசியைத் தொட்ட பொழுது எவ்வளவு சுத்தமாக வேண்டுமோ அவ்வளவு அவனை சுத்தமாக்கிற்று. நம்முடைய தலைகளும், இருதயங்களும் அவருக்கு முன்பாக தாழ்த்தப்பட்டு இருக்கையில் நாம் மறுபடியுமாக பாடுவோம். தேவ தூதனானவர் உலகத்தின் எல்லா அசுத்தங்களினின்றும், பகட்டினின்றும், நம் இருதயங்களை சுத்திகரிப்பாராக. ஷரிவாப் போர்ட் என்னும் இந்த இடத்தை சார்ந்த வாலிப் பிள்ளைகளே, தெற்கத்திய பாகத்தை சார்ந்தவர்களே, இங்கு பழைமையான சுவிசேஷத்தை பெறுகின்ற நீங்கள், இன்று சபையானது ஏதோ ஒன்றை கொடுக்க முடியாமல் இருக்கின்றது. ஆனால் தேவன் அதை உங்களுக்காக உடையவராயிருக்கின்றார். உங்கள் இருதயத்தை அவர் சுத்திகரிக்க அனுமதிப்பீர்களா? தங்களை “சபை அங்கத்தினர்” என்று அழைத்து நடனமாடும் ஜனங்கள் மத்தியில் நீங்கள் வசிக்கின்றீர்கள், எல்லா இடங்களிலுமிருக்கிற நம்முடைய சபைகளின் அசுத்தங்களையெல்லாம் நீங்கள் பார்க்கின்றீர்கள். முதலில் ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்க சபை தொடங்கி கடைசியாக ஸ்தாபிக்கப்பட்ட பெந்தேகொஸ்தே சபை வரை எல்லோரும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோம். ஒருவர் விட்டு விடாமல் எல்லோரும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோம். 88நாம் எங்கே சிக்கிக் கொண்டோம் என்பதை பாருங்கள். நமது மகத்தான பள்ளிகள் நம்முடைய ஊழியக்காரரை கல்வி பயில வைத்து, அங்குதானே, எல்லாவற்றையும் அவர்கள் தாறுமாறாக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டக் காரியங்களை நாம் தூர எரிந்து விடுவோம். “நிகழ் காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்” (ரோ. 8:38-39) மேலும், பவுல், ''பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்“ (பிலிப்: 3:13,14) என்று கூறினான். ஓ! நம்முடைய கண்களை மூடி இருதயத்தை அவருக்கென்று திறந்து பாடும் இவ்வேளையில் இதை விசுவாசியுங்கள். நெருப்புத் தழல் தீர்க்கதரிசியைத் தொட்டபொழுது, எவ்வளவு சுத்தமாக வேண்டுமோ, அவ்வளவாய் அவனை சுத்தமாக்கிற்று. அப்பொழுது தேவ சத்தம், “நமக்காக யார் போவான்” என்றது அவன் “எஜமானே, இதோ அடியேன், என்னை அனுப்பும்” என்றான். ஓ பேசும் என் கர்த்தாவே, பேசும். இப்பொழுது நமது கரங்களை உயர்த்தி அவரை விசுவாசிப்போம். பேசும், பேசும், கர்த்தாவே, நான் துரிதமாய் பதிற் கூறுவேன் பேசும் என் கர்த்தாவே, பேசும் என் கர்த்தாவே, பேசும் என் கர்த்தாவே, நான் பதில் கூறுவேன் “கர்த்தாவே என்னை அனுப்பும்” ஆம், பேசும் என் கர்த்தாவே. இப்பொழுது ஜெபிப்போம். நான் சகோ. டான் அவர்களை இங்கு வந்து நமக்காக ஜெபிக்க அழைக்கப் போகிறேன். பேசும், நான் துரிதமாய் பதிற் கூறுவேன்.